dark_mode
Image
  • Thursday, 26 February 2026

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.

 

தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி கூட்டணி, தொகுதிப் பங்கீடு நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

 

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் பிறகு திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டிருந்தார்.

 

இதில், தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,67,07,380 ஆக உள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 2,77,38,925 பேரும், பெண் வாக்காளர்கள் 2,89,60,838 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 7,617 பேரும் உள்ளனர்.

மாவட்ட வாரியாக வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், சென்னை மாவட்டத்தில் இரு தொகுதிக்கு ஒருவர் வீதம் தேர்தல் பணிகளை கண்காணிக்க 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

related_post