dark_mode
Image
  • Friday, 05 September 2025

செங்கோட்டையன் பற்றி பேசுவதை தவிர்த்தார் இபிஎஸ்

செங்கோட்டையன் பற்றி பேசுவதை தவிர்த்தார் இபிஎஸ்

கம்பம்: தேனி மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பற்றி பேசுவதை முற்றிலும் தவிர்த்தார்.

 

'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தில் தேனி மாவட்டம் கம்பத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசியதாவது: இப்பகுதி மக்களுக்கு நீர் ஆதாரம் முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையை பலப்படுத்த அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், முதல்வர் கண்டுகொள்ளவில்லை. விவசாயிகளைப் பற்றியோ, அவர்கள் படும் கஷ்டங்களைப் பற்றியோ ஸ்டாலினுக்கு எதுவும் தெரியாது. கிடைக்கின்ற சந்தர்பத்தை மக்கள் நன்மைக்கு முழுமையாகப் பயன்படுத்துவதுதான் உண்மையான அரசு.

இன்று ஆடுதுறை பேரூராட்சியில், பேரூராட்சி தலைவர் மீது வெடிகுண்டு வீசியிருக்கிறார்கள். அவர் அருகில் இருந்த இருவர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். அவர் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. குற்றவாளிகள் போலீசாரைத் தாக்குகிறார்கள். போலீசையே தாக்குகிறார்கள் என்றால் மக்களை பாதுகாப்பது யார்…? போலீசைக் கண்டு குற்றவாளிகளுக்கு பயமே இல்லை.

related_post