தமிழகத்தில் 66,000 புதிய தொழில்முனைவோர்கள்.. வேலைவாய்ப்புகள் எவ்வளவு தெரியுமா? - அமைச்சர் வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் 60000 புதிய தொழில்முனைவோர்களை சிறுகுறு தொழில் துறை உருவாக்கி உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற 2021ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. 2030ஆம் ஆண்டுக்கு ஒரு டிரில்லியல் டாலர் பொருளாதாரத்தை அடைவது என இலக்கு நிர்ணயித்து முதலீடுகள் ஈர்ப்பது, தொழில்களை தொடங்குவது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சிறு குழு தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க உதவி புரியவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
தமிழகத்தில் தொழில் தொடங்க வாய்ப்புகள்
கடந்த நான்கரை வருடங்களில் தமிழகத்தில் 66,018 புதிய தொழில் முனைவோர்களை சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை உருவாக்கி உள்ளது. அதுமட்டுமில்லாம சிறு குறு நிறுவனங்களுக்கு 5,490 கோடி ரூபாய் கடன் உதவி மற்றும் 2,133 கோடி ரூபாய் வரை அரசு மானியமாகவும் வழங்கியுள்ளது. இதன் மூலமாக நிறைய பேர் தொழில் தொடங்க வாய்ப்புகள் உருவானது. சிறு தொழிலில் இருந்து பெரிய தொழில் வரை நிறைய பேருக்கு இது உதவியாக அமைந்துள்ளது.
அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வுக் கூட்டம்
செவ்வாய்க்கிழமை கிண்டியில் நடந்த மாவட்ட சிறு குறு நடுத்தர தொழில் மையங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் இதுகுறித்துப் பேசிய ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், “சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சிக்கு ஆறு சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் மற்றும் முதலீட்டு மானியம், மின் மானியம், ஊதிய மானியம் உட்பட பத்து மானிய திட்டங்கள் உதவியாக இருந்தது” என்றார். பெண்கள், மாற்றுத்திறனாளிகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு கடன் கொடுக்க முன்னுரிமை கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அமைச்சர், தமிழக அரசு அறிமுகப்படுத்தின இரண்டு முக்கியமான திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் கூறினார்.
அதிக மானியம், அதிக கடன் எந்த திட்டத்தில் தெரியுமா?
அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் (2023-24) மூலமா 2,970 தொழில் முனைவோருக்கு 581 கோடி ரூபாய் கடனும், 324 கோடி ரூபாய் மானியமும் கிடைத்துள்ளது என்றும், கடந்த வருஷம் ஆரம்பிச்ச கலைஞர் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு திட்டம் மூலமா 3,452 கைவினை கலைஞர்களுக்கு 64.24 கோடி ரூபாய் கடனும், 13.45 கோடி ரூபாய் மானியமும் கிடைத்துள்ளது என்றார்.
1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன
2024 உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக நிறைய முதலீடுகள் வந்துகொண்டு உள்ளதாக கூறிய அமைச்சர், “ SMEகள் போட்ட 5,068 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்ல 63,573 கோடி ரூபாய் முதலீட்டுல 2,610 கம்பெனிகள் ஏற்கனவே உற்பத்தியை ஆரம்பித்துவிட்டன. இதன் மூலமா 1,02,061 வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளது” என்று தெரிவித்தார். எல்லா புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் டிசம்பர் 2025க்குள் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவு போட்டுள்ளார்.
சிறு நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனன்கள் வரைக்கும் எல்லாருக்கும் இந்த உதவி கிடைக்க வேண்டும். அப்போதுதான் நிறைய பேருக்கு வேலை கிடைக்கும். தமிழகமும் நன்றாக வளர்ச்சி அடையும் என்கிறார்கள் மக்கள்