dark_mode
Image
  • Friday, 29 November 2024

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - முதல் முறையாக காவலர் வெயில் முத்து-க்கு ஜாமின்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - முதல் முறையாக காவலர் வெயில் முத்து-க்கு ஜாமின்

சாத்தான்குளம் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020ம் ஆண்டு உயிரிழந்த வழக்கில் கைதாகி சுமார் 3 ஆண்டுகளாக சிறையில் உள்ள காவலர் வெயில் முத்து-க்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

 

கயத்தாறு பகுதியைச் சேர்ந்த காவலர் வெயில் முத்து, தனது மகளுக்கு 7ம் தேதி பூப்புனித நீராட்டு விழா இருப்பதால் இடைக்கால ஜாமின் கோரி மனுத் தாக்கல். இன்று மாலை 6 மணி முதல் வரும் 9ம் தேதி மாலை 6 மணி வரை இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதி தண்டபாணி உத்தரவு

 

சிபிஐ விசாரித்து வரும் இவ்வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள், காவலர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சுமார் 3 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம் வரை சென்றும் யாருக்கும் ஜாமின் கிடைக்கவில்லை.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - முதல் முறையாக காவலர் வெயில் முத்து-க்கு ஜாமின்

comment / reply_from

related_post

newsletter

newsletter_description