கெளதம் மேனன் - சிலம்பரசன் இணையும் நதிகளிலே நீராடும் சூரியன்

கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கவுள்ள படத்துக்கு 'நதிகளிலே நீராடும் சூரியன்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.
முன்னணி இயக்குநரான கௌதம் வாசுதேவ் மேனன் நேற்று (பிப்ரவரி 25) தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு தமிழ்த் திரையுலகினர் பலரும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் நடித்து வரும் படங்களிலிருந்து பிரத்யேக போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.