dark_mode
Image
  • Friday, 07 March 2025

கரை ஒதுங்கிய ‘டூம்ஸ் டே’ மீன்! பேரழிவுக்கான அறிகுறியா?

கரை ஒதுங்கிய ‘டூம்ஸ் டே’ மீன்! பேரழிவுக்கான அறிகுறியா?

மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் அரிய வகை ‘டூம்ஸ் டே’ (Doomsday) மீன் கரை ஒதுங்கிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தைக் ஏற்படுத்தியுள்ளது. இதை, வரவிருக்கும் பேரழிவுக்கான அறிகுறியாக கருதலாமா என்பதில் பலருக்கும் கவலையாக இருக்கிறது.

 

இச்சம்பவம் மெக்சிகோவின் பாஜா கலிபோர்னியா சுரின் பகுதியில் நிகழ்ந்துள்ளது. இங்கு ஆழ்கடலில் மட்டுமே வாழும் நீளமான, ரிப்பன் போன்ற உடலமைப்பைக் கொண்ட ‘ஓர்’ (Oarfish) மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதன் உடல் பளபளப்பாக, நீளமாக இருந்தாலும், இதன் துடுப்புகள் ஆரஞ்சு நிறத்தில் காட்சியளிக்கின்றன.

 

மிகவும் அரிதாக காணப்படும் இந்த மீன்கள் ஜப்பானிய புராணக் கதைகளில் கடல் கடவுளின் தூதன் என்று வர்ணிக்கப்படுகிறது. பெரும்பாலும், வரப்போகும் பேரழிவுகளின் அறிகுறியாக இவை கரை ஒதுங்கும் என கருதப்படுகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட பெரும் சுனாமிக்கு முன்பு 20க்கும் மேற்பட்ட ‘டூம்ஸ் டே’ மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது.

 

கடலுக்கு அடியில் மட்டுமே வாழக்கூடிய இந்த மீன்கள் ஏன் கரை ஒதுங்குகின்றன என்பதற்கான துல்லியமான விஞ்ஞான விளக்கம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. சில விஞ்ஞானிகள், இது நிலநடுக்கங்கள் மற்றும் கடல் பருவ மாற்றத்தினால் ஏற்படும் வேறுபாடுகளின் விளைவாக இருக்கலாம் என கூறுகின்றனர். நிலநடுக்கங்களுக்கு முன்பு கடலுக்கடியில் ஏற்படும் மின்சார அலை மாற்றம், இதுபோன்ற ஆழ்கடல் உயிரினங்களை மாற்றியிட செய்யக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

இதேபோல், 2020ஆம் ஆண்டிலும் பிலிப்பைன்ஸ் கடற்கரையில் இரண்டு ஓர் மீன்கள் கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் சில வாரங்களுக்குள் அந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பலரும் இதனை ஒரு இயற்கை பேரழிவுக்கான முன் எச்சரிக்கையாக கருதுகின்றனர்.

 

மேலும், 2017ஆம் ஆண்டு மெக்சிகோவில் ஏற்பட்ட 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு முன்பும் இதே மாதிரியான ஓர் மீன்கள் கரை ஒதுங்கியிருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, மீண்டும் அதே சம்பவம் நிகழ்ந்துள்ளதால், பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.

 

அந்த மீன் கரை ஒதுங்கியதற்கான காரணம் குறித்து மெக்சிகோவின் கடல்சார் ஆய்வுத்துறையினர் தீவிரமாக ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். இதுவரை கிடைத்த தகவலின்படி, அந்த மீன் உடலில் எந்தவொரு உடல்பாதிப்புகளும் காணப்படவில்லை. இதனால், இதன் இறப்பிற்கு இயற்கை காரணமா, அல்லது மானுட காரணமா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

 

கடல் உயிரினங்கள் தங்கள் இயற்கையான சூழலைவிட்டு வெளியே வரும்போது, இது ஒரு சாத்தியமான இயற்கை மாற்றத்திற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். சில உயிரியல் நிபுணர்கள், இது பெரும் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் ஒரு புதிய வழக்கமான நிகழ்வாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

 

இந்த நிலையில், மெக்சிகோ அரசு மற்றும் கடல்சார் ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து, இந்த மீனின் கரை ஒதுங்கல் காரணங்களை விளக்கும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் மூலம், எதிர்வரும் நாள்களில் எந்தவொரு இயற்கை பேரழிவுகளும் நிகழக்கூடுமா என்பதை கணிக்கவும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் வாய்ப்பு இருக்கும்.

 

இன்னும் சில நாட்கள் அந்த பகுதியில் கடல்நிலை மற்றும் நிலநடுக்க அலைவரிசைகள் கவனிக்கப்பட்டு, துல்லியமான முடிவுகள் அறிவிக்கப்படலாம். இது ஒரு இயற்கையான மரணம் தான் என்றே விஞ்ஞானிகள் நம்பினாலும், மக்கள் இதை ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக்கொள்கிறார்கள்.

BY.PTS NEWS M.KARTHIK

 

comment / reply_from

related_post