dark_mode
Image
  • Saturday, 30 August 2025

நெல்லை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

நெல்லை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!
வாகன நிறுத்தம் தொடர்பான மோதலில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மறு உத்தரவு வரும் வரை காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
பல்கலைக்கழகத்தின் நுழைவாயில் அருகே இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் ஒதுக்கப்பட்டிருந்தும், முதலாம் ஆண்டு மாணவரான நாராயணன் தனது பைக்கை கேண்டீன் அருகே நிறுத்தியுள்ளார். இதனால் மற்றொரு மாணவருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
 
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், அது இருதரப்பு மோதலாக மாறி, கோஷ்டி மோதலாக வலுப்பெற்றது. இந்த சண்டையில் சில மாணவர்கள் காயமடைந்தனர்.
 
 
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக கூட்டத்தைக் கூட்டி, மாணவர்கள் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், மறு அறிவிப்பு வரும் வரை பல்கலைக்கழகத்தை மூட முடிவு செய்தது. இதன் காரணமாக, வகுப்புகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
 

related_post