ஏர்டெல் சேவை கடும் பாதிப்பு

சென்னை உள்ளிட்ட சில இடங்களில் ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் சமூக ஊடகங்களில் புகார் கூறி வருகின்றனர். அதிலும், கடந்த 45 நிமிடங்களுக்கு மேலாக ஏர்டெல் சேவையை சரியாக பெற முடியவில்லை என்றும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இதற்கான காரணமோ, அதற்கான தீர்வு குறித்தோ ஏர்டெல் தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை. உங்கள் பகுதியில் ஏர்டெல் நெட்வொர்க் வேலை செய்கிறதா?