dark_mode
Image
  • Sunday, 24 August 2025
கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப் வாய்ஸ், வீடியோ கால் வசதி அறிமுகம்

கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப் வாய்ஸ், வீடியோ கால் வசதி அறிமுகம்

கம்ப்யூட்டர் டெஸ்க்டாபில் வாட்ஸ் அப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் செய்யும் வசதி அறிமுகம்படுத்தி உள்ளது.

வாட்ஸ் அப் செயலியில் மெசேஜிங் உள்பட வாய்ஸ் கால், வீடியோ கால் செய்யும் வசதி ஏற்கனவே இருக்கும் அம்சமாகும். இனிமேல் கம்ப்யூட்டரிலும் கூட வாட்ஸ் அப் செயலியின் வாய்ஸ் கால் மற்றும் வீடியோ காலை செய்து கொள்ள முடியும்.

வெப் கேமரா மற்றும் மைக்ரோபோன் வசதி கம்ப்யூட்டர், லேப்டாப்களில் இருந்தால் வாட்ஸ் அப் வாய்ஸ் கால், வீடியோ கால் ஆப்ஷனை பயன்படுத்தி பயனாளர்கள் எளிதாக பயன்படுத்தி கொள்ளலாம் என வாட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப் மெசேஜ்களுக்கு இருக்கும் end-to-end encryption ஆப்ஷனை போல் டெஸ்க்டாபில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப்பின் வாய்ஸ் மற்றும் வீடியோ காலுக்கும் end-to-end encryption ஆப்ஷன் இருப்பது உறுதி செய்துள்ளது. இதனால் அழைப்பேசி தரவுகள் பாதுகாப்பாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வாட்ஸ் ஆப் நிறுவனம் ட்விட்ட்ரில் வெளியிட்ட அறிக்கையில், '2021ஆம் புத்தாண்டின் இரவில் மட்டும் 10 லட்சத்துக்கு அதிகமான பயனாளர்கள் வாட்ஸ் அப் வாய்ஸ் மற்றும் வீடியோ காலை பயன்படுத்தி பேசி உள்ளனர்.

இதனால் மக்கள் வசதிக்காக கம்ப்யூட்டரிலும் வாட்ஸ் ஆப் வாய்ஸ், வீடியோ கால் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகில் எந்த பகுதியில் இருக்கும் நபரை வேண்டுமானாலும் தொடர்புகொண்டு பேச முடிவதால் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது டெஸ்க்டாபில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாட்ஸ் அப் வீடியோ காலில் குரூப் காலிங் வசதி தற்சமையம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

related_post