ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா.. 31 எம்பிக்கள் கொண்ட கூட்டுக்குழு அமைப்பு.. யார் யார்?

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா சமீபத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்படும் என சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் தற்போது நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 21 மக்களவை எம்பிக்கள் மற்றும் 10 மாநிலங்களவை எம்பிக்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கூட்டு குழுவில் இடம் பெற்றுள்ள சில முக்கிய மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் விவரங்கள் இதோ:
பாஜக : பி.பி.செளத்ரி, சி.எம்.ரமேஷ், அனுராக் தாக்கூர்
சிவசேனை: ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே
தெலுங்கு தேசம்; ல் ஹரீஷ் பாலயோகி
காங்கிரஸ்: பிரியங்கா மணீஷ் திவாரி, சுக்தியோ பகத்
சமாஜவாதி கட்சி : தர்மேந்திர யாதவ்
திமுக: டி.எம்.செல்வகணபதி
திரிணாமுல்: கல்யாண் பானர்ஜி
தேசியவாத காங்கிரஸ்-பவார்: சுப்ரியா சுலே

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description