dark_mode
Image
  • Thursday, 06 March 2025

ஓசூரில் 14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: அதிர்ச்சி சம்பவம்

ஓசூரில் 14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: அதிர்ச்சி சம்பவம்

ஓசூர் அருகே அஞ்செட்டி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை 30 வயது மாதேஷ் என்பவர் கடந்த மார்ச் 3ஆம் தேதி கர்நாடகாவில் கட்டாய திருமணம் செய்தார். சிறுமியின் தாய் நாகம்மா உள்ளிட்ட இருபுறத்தினரும் இதில் உடன்பட்டிருந்தனர்.

 

திருமணத்திற்குப் பிறகு, சிறுமி மாதேஷின் வீட்டில் தங்க மறுத்து, தன் பாட்டி வீட்டுக்கு தப்பி ஓடியுள்ளார். இதைத் தெரிந்த மாதேஷின் உறவினர்கள், சிறுமியை குண்டுகட்டாக தூக்கி மீண்டும் அழைத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

 

இதையடுத்து, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், மாதேஷ், அவரது அண்ணன் மல்லேஷ் மற்றும் சிறுமியின் தாய் நாகம்மா ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இச்சம்பவம் குழந்தைகள் திருமணம் குறித்த விழிப்புணர்வின் அவசியத்தையும், இதுபோன்ற சட்டவிரோத செயல்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் முன்னிறுத்தியுள்ளது.

 

BY. PTS NEWSM.KARTHIK

 

comment / reply_from

related_post