dark_mode
Image
  • Thursday, 06 March 2025

16 மாநிலங்களில் சைபர் மோசடி: ரூ.10 ஆயிரம் கோடி சுருட்டிய இருவர் கைது

16 மாநிலங்களில் சைபர் மோசடி: ரூ.10 ஆயிரம் கோடி சுருட்டிய இருவர் கைது

ஜெய்ப்பூர்: சைபர் குற்றத்தில் ஈடுபட்டு 16 மாநிலங்களை சேர்ந்தவர்களிடம் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த டாக்டர் உள்ளிட்ட இருவரை, ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

ராஜஸ்தானை சேர்ந்த சுனில் குமார் என்பவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் ' டெலிகிராம்' செயலியில், தெரியாத எண்ணில் இருந்து ஒருவர் தொடர்பு கொண்டார். அந்த எண்ணில் எனது நண்பர் படம் இருந்ததால், அவருடன் 'சாட்டிங்'கில் ஈடுபட்டேன்.

 

அப்போது, ஆடம்பர வாழ்க்கை வாழலாம். தினமும் 3 லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றார். இதனை நம்பி பல தவணைகளில் அவரது சொன்ன வங்கிக்கணக்குகளுக்கு ரூ.94,70,300 அனுப்பினேன். ஆனால், அவர் ஏமாற்றி விட்டார் எனக்கூறி இருந்தார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

 

சுனில்குமார் அனுப்பிய வங்கிக்கணக்குகளை போலீசார் ஆய்வு செய்தனர். அந்தக் கணக்குகள், ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுதிர் யாதவ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த பல் டாக்டர் ஆனந்த் சோனி என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

BY.PTS NEWS M.KARTHIK

comment / reply_from

related_post