dark_mode
Image
  • Tuesday, 24 March 2026

ஐக்கிய அரபு அமீரகம் மீது வான்வழி தாக்குதல்: ஈரான் ட்ரோன்கள், ஏவுகணைகள் தடுக்கப்பட்டன..!

ஐக்கிய அரபு அமீரகம் மீது வான்வழி தாக்குதல்: ஈரான் ட்ரோன்கள், ஏவுகணைகள் தடுக்கப்பட்டன..!

மேற்கு ஆசியாவில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் தனது வான்வழி பாதுகாப்பு அமைப்புகளின் மூலம் ஈரான் இலிருந்து வந்த பல்வேறு தாக்குதல்களை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியுள்ளது.

சமீபத்திய தாக்குதல்களில் மட்டும், 25 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் 4 பாலிஸ்டிக், குரூஸ் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோதல் தொடங்கியதிலிருந்து இதுவரை, மொத்தமாக 1,773 ட்ரோன்கள், 15 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 345 பாலிஸ்டிக் ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளதாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் 22 காலை நடைபெற்ற புதிய வான்வழித் தாக்குதல்களுக்கு பின், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவம் முழு தயார் நிலையில் இருப்பதாகவும், எதிர்கால அச்சுறுத்தல்களை சமாளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர்ச்சியான தாக்குதல்களின் விளைவாக, இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கு ஆசியப் பகுதியில் நிலவும் இந்த மோதல், உலகளாவிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைகளில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

related_post