dark_mode
Image
  • Saturday, 24 May 2025
இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - 4,024 வேட்பாளர்கள் போட்டி

இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு - 4,024 வேட்பாளர்கள் போட்டி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோதலுக்கான அறிவிக்கை கடந்த 12-ஆம் தேதி வெளியான நிலையில் அன்றைய தினம் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மனுதாக்கல் கடந்த 19-ஆம் தேதி நிறைவடைந்தது.

தோதலில் போட்டியிட 7 ஆயிரத்து 250-க்கும் கூடுதலான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவை சனிக்கிழமை பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன. அதில், 4 ஆயிரத்து 500-க்கும் அதிகமான வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. 2 ஆயிரத்து 720-க்கும் கூடுதலான மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

கரூா் பேரவைத் தொகுதியில் அதிகபட்சமாக 97 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவைகளில் 13 நிராகரிக்கப்பட்டு, 84 மனுக்கள் ஏற்கப்பட்டன. காங்கயத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அதில் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 50 மனுக்கள் ஏற்கப்பட்டன. அரவக்குறிச்சி தொகுதியில் 47 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவற்றில் ஏழு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 40 மனுக்கள் ஏற்கப்பட்டன.

வேட்புமனுக்களைத் திரும்பப் பெற திங்கள்கிழமை மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. சுயேச்சைகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதையடுத்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் 4,024 வேட்பாளர்கள் போட்டியிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

comment / reply_from

related_post