dark_mode
Image
  • Friday, 07 March 2025

இந்தக் கீரையை வீட்டிலேயே வளருங்க... சுகருக்கு தினமும் 3 கைப்பிடி கீரை: டாக்டர் நித்யா

இந்தக் கீரையை வீட்டிலேயே வளருங்க... சுகருக்கு தினமும் 3 கைப்பிடி கீரை: டாக்டர் நித்யா

 

வெண்டைக்காய், பாகற்காய் இரண்டையும் வெட்டி நீரில் போட்டுவிட்டு, காலையில் அந்த தண்ணீரை குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

 

 இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை நீரிழிவு நோய். உடலில் சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோய்யை கட்டப்பாட்டுக்குள் வைக்க, உணவு கட்டுப்பாடு அவசியம். அதே சமயம் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இந்த கீரையை உங்கள் வீட்டிலேயே வளர்க்கலாம்.

 

இது குறித்து டாக்டர் நித்யா தனது வீடியோவில் கூறுகையில், பொதுவாக சர்க்கரை நோய் இருக்கும்போது உணவில் கட்டுப்பாடு இருக்க வேண்டியது அவசியம். வெண்டைக்காய், பாகற்காய் இரண்டையும் வெட்டி நீரில் போட்டுவிட்டு, காலையில் அந்த தண்ணீரை குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். இந்த தண்ணீரை தினமும் குடித்துவிட்டு இந்த கீரையையும் உணவில் சேர்த்துக்கொண்டால் கூடுதல் பலன் கிடைக்கும். அதுதான் வெந்தய கீரை.

 

வெந்தய கீரையை நம் வீட்டிலேயே வளர்க்கலாம். முளைக்கட்டிய வெந்தயத்தை ஒரு கூடையில் போட்டு வைத்தாலே அது தானாக வளர்ந்துவிடும். ஒருநாளைக்கு 3 கைப்பிடி அளவு வெந்தய கீரையை எடுத்துக்கொள்வது நல்லது. 3 கைப்பிடி அளவு வெந்தய கீரையை வெந்தய கீரையை எடுத்து நறுக்கி, அதனுடன் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, சூப் மாதிரி வைத்து குடிக்க வேண்டும். தினமும் காலை உணவாக இதைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

காலையில் இதை சாப்பிட்டுவிட்டு 10 நிமிடங்களுக்கு பிறகு நீங்கள், என்ன உணவு எடுத்துக்கொள்ள விரும்புகிறீர்களோ அதை எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோய் இருந்தால் தினமும் நடைபயிற்சி செய்ய வேண்ம் என்று சொல்வார்கள். யோகா செய்ய சொல்வார்கள். இதை செய்யும்போது உடலில் சர்க்கரையின் அளவு வெகுவாக குறைய தொடங்கும் என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார். 

comment / reply_from

related_post