dark_mode
Image
  • Friday, 07 March 2025

ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் இருக்கா? அப்போ இந்த விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?

ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் இருக்கா? அப்போ இந்த விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?

 

இந்தியாவில் ஆதார் கார்டு (Aadhaar Card) இல்லாதவர்களைப் பார்க்க முடியாது. ஏனென்றால், ஒவ்வொரு இந்தியருக்கும் முக்கியமான அடையாள சான்றாக ஆதார் கார்டு மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அரசு மற்றும் தனியார் வழங்கும் சேவைகளை இந்த ஆதார் மூலம் மட்டுமே பெற முடிகிறது. இந்நிலையில் ஆதார் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் (driving license) குறித்து ஒரு முக்கியத் தகவல் வெளியாகி உள்ளது.

 

அதாவது டிரைவ் லைசென்ஸ் மற்றும் வாகனப்பதிவு சான்றிதழுடன், ஆதார் முகவரி, மொபைல் போன் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதுவும் சாரதி மற்றும் வாஹன் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான டிரைவ் லைசென்ஸ் மற்றும் வாகனப்பதிவு சான்றிதழான ஆர்.சி தரவுகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்டவையாக உள்ளன. மேலும் பலவற்றில் ஆதார் எண்களோ, மொபைல் போன் எண்களோ முழுமையாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்களை அடையாளம் காண்பது சிரமமாக இருக்கிறது.

 

மேலும் இது குறித்து வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகையில், சாலை பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் லைசென்ஸ் மற்றும் ஆர்.சி புத்தகம் வைத்திருப்பவர்கள், அவற்றில் உள்ள முகவரியை, ஆதார் எண் மற்றும் மொபைல் எண் அடிப்படையில் புதுப்பிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 

இதுதவிர சாலை விதிமுறைகளை மீறியதாக அனுப்பப்பட்ட மின்னணு சலான்கள் பலவும் தற்போது நிலுவையில் உள்ளதால், அபராதம் கூட வசூலாகாமல் உள்ளது. விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது' என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் மோட்டார் வாகனச் சட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள இந்த மாற்றங்கள் மூலம் அதிகாரிகள் சாலை விதிமுறை மீறல்களுக்கு காரணமான நபர்களை எளிதாக அடையாளம் கனவும், அவர்களைத் தொடர்பு கொள்ள எளிதான வழிமுறையை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

 

அதேபோல் முன்பு ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ரேஷன் கார்டு ஆனது மாநில அரசால் வழங்கப்படுகிறது. ஆனாலும் மத்திய அரசின் உதவிகளும் ரேஷன் அட்டைதாரர்களுக்குக் கிடைக்கிறது. எனவே ரேஷன் கார்டில் நிறைய சலுகைகள் தற்போது கிடைப்பதால் பலர் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அதேசமயம் சில மோசடி செய்பவர்கள் போலி ரேஷன் கார்டுகள் மூலம் இலவச ரேஷன் வசதியைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். எனவேதான் ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

 

ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால், ரேஷன் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொள்க. மேலும் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க, மாநில அரசின் அதிகாரப்பூர்வ PDS இணையதளத்தைப் பயன்படுத்த வேண்டும். பின்பு இந்த ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதன் மூலம் எளிதாக ரேஷன் பெற முடியும்.

 

ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைப்பதன் மூலம் போலி ரேஷன் கார்டுகளை எளிமையாக தடுக்க முடியும். குறிப்பாக மலிவான ரேஷன் உண்மையிலேயே தகுதியானவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். மேலும் தற்போது ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்கும் வழிமுறைகளைப் பார்க்கலாம்.

 

ஸ்டெப்-1: மாநில அரசின் அதிகாரப்பூர்வ PDS இணையதளத்தைப் பார்வையிடவும். அடுத்து உள்நுழைவு சான்றுகளை உள்ளிடவும் அதன்பின்னர் ஆதார் இணைக்கும் பகுதிக்குச் சென்று, ஆதார்-ரேஷன் கார்டு இணைப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

 

ஸ்டெப்-2: அடுத்து ரேஷன் கார்டு எண், ஆதார் எண் உள்ளிட்ட பிற விவரங்களை உள்ளிட வேண்டும். அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பிறகு, சரிபார்ப்பிற்காக உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஒடிபி ( OTP) வரும். அதன்பின்பு ஓடிபி நம்பரை உள்ளிடவும், அடுத்து உங்கள் ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பது தொடர்பான உறுதிப்படுத்தல் செய்தி உங்கள் மொபைல் போனுக்கு வரும். அவ்வளவுதான்.

comment / reply_from

related_post