dark_mode
Image
  • Monday, 21 April 2025

ஊபர் புதிய சப்ஸ்கிரிப்ஷன்: 'கட்டணத்தை நாங்கள் சொல்லமாட்டோம்; நீங்களே பேசிக்கொள்ளுங்கள்!'

ஊபர் புதிய சப்ஸ்கிரிப்ஷன்: 'கட்டணத்தை நாங்கள் சொல்லமாட்டோம்; நீங்களே பேசிக்கொள்ளுங்கள்!'

Uber: 'இனி கட்டணத்தை நாங்கள் சொல்லமாட்டோம்; நீங்களே பேசிக்கொள்ளுங்கள்!' - என்ன சொல்கிறது ஊபர்?!

'நீங்களே...' - ஊபர் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய சப்ஸ்கிரிப்ஷன் திட்டம்!

Uber: நீங்களே... 

இனி நாங்கள் கட்டணத்தை நிர்ணயிக்கமாட்டோம்...நீங்களே பேசிக்கொள்ளுங்கள்' என்று ஊபர் நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

 

அதாவது இதுவரை ஊபரில் பயணம் செய்தவர்கள் ஆப்பில் பைக், கார் அல்லது ஆட்டோவை புக் செய்வார்கள். அந்த ஆப்பில் காட்டும் கட்டணத்தொகையை பயணி ஓட்டுநருக்கு தர வேண்டும். இந்தக் கட்டணத்தில் ஆப்பிற்கான சேவை கட்டணம், ஓட்டுநருக்கான கட்டணம் போன்றவை அடங்கும்.

 

ஆனால், இனி ஓட்டுநர்கள் மாதா மாதம் குறிப்பிட்ட ஒரு தொகையை ஊபர் நிறுவனத்திற்கு கட்ட வேண்டிய சப்ஸ்கிரிப்ஷன் முறையை அறிமுகப்படுத்துகிறது.

சொல்லமாட்டோம்; பேசிக்கொள்ளுங்கள்!

 

இதனால், ஊபர் நிறுவனம் ஓட்டுநர்களுக்கும், பயணிகளுக்கு கட்டணத்தொகையை பரிந்துரைக்க மட்டுமே செய்யும். அதன் பிறகு 'எத்தனை ரூபாய்க்கு சவாரி?' என்பது ஓட்டுநரும், பயணியும் தான் பேசிக்கொள்ள வேண்டும்.

 

இது குறித்து ஊபர் நிறுவனம் நேற்று அறிக்கை வெளியிட்டது.

 

ஆனால், இந்த முறையில் ஓட்டுநர்கள் மாதம் எவ்வளவு கட்டணம் கட்ட வேண்டும் என்பதை ஊபர் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

 

இந்த நடைமுறை மூலம் இனி ஆப்பில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் கட்டணம் கட்ட முடியாது. நேரடியாகத்தான் ஓட்டுநர்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

 

BY.PTS NEWS M.KARTHIK

comment / reply_from

related_post