மதிமுகவில் இன்னும் பிரச்னை முடியலை : வல்லம் பஷீர் சொன்ன காரணம்!

மதிமுகவின் முதன்மைச் செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ இருந்து வருகிறார். கட்சிக்குள் துரை வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கும் இடையில் இருந்த பிரச்னை சமீபத்தில் பூதாகரமாக வெடித்தது. மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என துரை வைகோ ஆதரவு நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால், இறுதி வரை வைகோவின் சேனாதிபதியாகவே இருப்பேன் என்று தெரிவித்தார்.
மோதலின் உச்சகட்டமாக தனது முதன்மைச் செயலாளர் பதவியை துரை வைகோ ராஜினாமா செய்தார். மல்லை சத்யாவை நீக்க வைகோ மறுத்துவிட்டதால் இந்த ராஜினாமா முடிவு எனக் கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் துரை வைகோவும், மல்லை சத்யாவும் மேடையில் அமர்ந்திருந்தாலும் பார்த்துக்கொள்ளவில்லை.
நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு இருவரும் சமாதானம் அடைந்ததாக வைகோ அறிவித்தார். மல்லை சத்யாவும் தான் கட்சிக்கு எதிராக செயல்படவில்லை என்று கூறி துரை வைகோவிடம் வருத்தம் தெரிவித்தார். துரை வைகோ அதனை ஏற்றுக்கொண்டு ராஜினாமா முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். மல்லை சத்யா முகத்தில் சிரிப்பு இருந்தபோதிலும் துரை வைகோ முகத்தில் சிரிப்பை காண முடியவில்லை.
இந்த நிலையில் மதிமுக முன்னாள் நிர்வாகி வல்லம் பஷீர் யூட்யூபுக்கு அளித்த பேட்டியில், “மதிமுகவில் பிரச்னை முடிவுக்கு வந்ததா இல்லையா என்பதை துரை வைகோவின் முகமே வெளிப்படுத்துகிறது. மல்லை சத்யா கள்ளம் கபடம் இல்லாமல் சிரிக்கும் காட்சிகளை பார்க்க முடிந்தது. கரம் கொடுக்க வேண்டும் என்று வைகோ கேட்டபோது கரம் கொடுக்க மறுத்தார் துரை வைகோ. ஆக, துரை வைகோவுக்குள் அந்த பிரச்னை அப்படியே இருக்கிறது என்பதை அவரது முகம் உணர்த்திவிட்டது” என்று தெரிவித்தார்.

இது ஒரு தற்காலிக ஏற்பாடு என்றுதான் நான் புரிந்துகொள்கிறேன். மல்லை சத்யா தான் வைகோவுக்கு கட்டுப்பட்டவன் என்று இன்றும் உணர்த்தியிருக்கிறார். ஆனால், துரை வைகோ இந்த பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டிருக்கிறாரா? என்பதை வரும் காலங்களில் அவரது செயல்பாடுகள் உணர்த்தும்” என்று தெரிவித்துள்ளார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description