dark_mode
Image
  • Sunday, 24 August 2025
இணைய சுதந்திரத்தின் கழுத்தை சமூக ஊடக நெறிமுறைகள் நெரிக்கிறதா ?

இணைய சுதந்திரத்தின் கழுத்தை சமூக ஊடக நெறிமுறைகள் நெரிக்கிறதா ?

இணையத்தில் 'கட்டற்ற சுதந்திரம்' என்பது கேள்விக்குறியாகி, கட்டுப்பாடுகள் தேவை என வாதிடப்பட்டு வரும் காலம் இது. ஒருபக்கம் சமூக ஊடகங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும் எனும் கருத்து வலியுறுத்தப்படுகிறது என்றால், இன்னொரு பக்கம் 'பிக் டெக்' என சொல்லப்படும் தொழில்நுட்ப பெறு நிறுவனங்களின் எல்லையில்லா செல்வாக்கிற்கு கடிவாளம் போடப்பட வேண்டும் எனும் கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இந்தப் பின்னணியில், சமூக ஊடகங்கள், ஓடிடி மேடைகள் மற்றும் டிஜிட்டல் செய்தி நிறுவனங்களுக்கான புதிய நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 2000-ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் சமூட ஊடகங்கள், டிஜிட்டல் ஊடகங்களுக்கான நெறிமுறைகள் எனும் பெயரில் இந்த நெறிமுறைகள் வெளியாகியுள்ளன.

சமூக ஊடகங்கள், உரிய உத்தரவுகளின் கீழ் ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை 24 மணி நேரத்தில் நீக்க வேண்டும், ஓடிடி தளங்கள் சுய கட்டுப்பாடு உள்ளிட்ட மூன்றடுக்கு கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டும், டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் பத்திரிகை கவுன்சிலுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் உள்ளிட்டவை புதிய நெறிமுறைகளின் முக்கிய அம்சங்களாக அமைகின்றன

related_post