dark_mode
Image
  • Friday, 29 November 2024

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

டுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (ஆக. 5) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று முன்னதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

 இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை) தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பத்தூர், ராமநாதபுரம், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

comment / reply_from

related_post

newsletter

newsletter_description