dark_mode
Image
  • Thursday, 09 July 2026

கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்...! தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு.!

கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்...! தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு.!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோயம்புத்தூர் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு ஜூலை 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தெற்கு குஜராத்திலிருந்து வடக்கு கேரளா வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு பாதையின் தாக்கத்தால், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40–50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஜூலை 11 முதல் 15 வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடரும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

சென்னை வானிலை:
இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38–39°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29–30°C வரை பதிவாகலாம்.

related_post