
தி.மு.க, தேர்தல் அறிக்கை: முதல்வர் கருத்து
தி.மு.க., தேர்தல் அறிக்கை பெரிய விஷயமல்ல என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கை குறித்து நிருபர்கள் கேட்டதற்கு முதல்வர் பழனிசாமி அளித்த பதில்: திமுக தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னரே, நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டு செயல்படுத்தி உள்ளோம். அது மக்களுக்கு தெரியும். இதனால்,திமுக தேர்தல் அறிக்கை பெரிய விஷயமல்ல.பெரும்பான்மை பலத்துடன் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். கடந்த இடைத்தேர்தல்களில் பத்திரிகை கணிப்புகள் பொய்த்தன. இதனால் வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது.தேமுதிக சென்றதால் பாதிப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.