dark_mode
Image
  • Tuesday, 17 February 2026

திமுக கூட்டணியில் இருந்து ஏன் இதுவரை விலகவில்லை: திருமாவளவன் சொன்ன காரணம்

திமுக கூட்டணியில் இருந்து ஏன் இதுவரை விலகவில்லை: திருமாவளவன் சொன்ன காரணம்

திமுக கூட்டணியை வீழ்த்துவதற்கு தகுதியான ஒரு கூட்டணி தமிழகத்தில் இன்னும் அமையவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

 

சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தலைமையிலான கூட்டணி சிதறிக்கிடப்பதாகவும், அவற்றை திரட்டுவதற்கே அக்கட்சி போராடி வருவதாகவும் விமர்சித்தார். "எதிர்க்கட்சிகள் இன்னும் ஒரு முழுமையான கூட்டணியாக வடிவம் பெறவில்லை என்பதே யதார்த்தம்" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

 

தமிழக அரசு அண்மையில் மகளிருக்கு ரூ.5,000 வழங்கியதை 'ராஜதந்திர நடவடிக்கை' என பாராட்டிய அவர், சங்பரிவார் அமைப்புகளின் சதியை முறியடிக்கவே முதல்வர் இம்முடிவை எடுத்ததாக கூறினார். 

விசிகவை பொறுத்தவரை கூட்டணியில் எந்த ஊசலாட்டமும் இல்லை என்றும், வலதுசாரி அரசியலை தடுக்க திமுக உடனான உறவு தொடரும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார். 

related_post