dark_mode
Image
  • Tuesday, 17 February 2026

விஜயகாந்தை விட விஜய் திமுகவை அதிகம் காலி பண்ணுவார்!.. டிடிவி தினகரன்

விஜயகாந்தை விட விஜய் திமுகவை அதிகம் காலி பண்ணுவார்!.. டிடிவி தினகரன்

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களின் கூட்டணியை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டன. இந்த முறை அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, விஜயின் தமிழக வெற்றி கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு கட்சிகள் என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

 

2006 தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய பாதிப்பை விட விஜய் 2026ல் விஜய் அதிக பாதிப்பை உண்டாக்குவார் .2006ல் விஜயகாந்த் தேர்தலில் போட்டியிட போட்டியிட்டபோது அது திமுக, அதிமுக இரண்டையும் கடுமையாக பாதித்தது. அதனால்தான் திமுக மைனாரிட்டி ஆட்சி அமைத்தது. 2026ல் அதைவிட அதிகமான பாதிப்பை திமுக சந்திக்கும்..

 

2006ல் விஜயகாந்த் 8 சதவீத வாக்குகளை வாங்கி அவர் மட்டும் வெற்றி பெற்றார். விஜயகாந்த் என்கிற புயல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதென்றால் விஜய் என்கிற புயல் 100 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். இதை சொல்வதாலேயே நான் விஜயுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.. நான் வெளிப்படையாக சொல்கிறேன்..

அதிமுகவை ஊழல் கட்சி என விஜய் விமர்சித்த போது அவர் முதலில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்று முதலில் சொன்னது நான்நான்.. திமுகவை போல விஜய் பார்த்து நான் பயப்படவில்லை.. விஜயின் பெயரை சொல்லவே ஸ்டாலினும், அவரின் மகனும் பயப்படுகிறார்கள்’ என சொல்லியிருக்கிறார்

related_post