dark_mode
Image
  • Sunday, 24 August 2025
சுகர்க்கு 'மாத்திரை' எடுத்துக்கொள்பவரா.. ஆபத்து.!!

சுகர்க்கு 'மாத்திரை' எடுத்துக்கொள்பவரா.. ஆபத்து.!!

முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன.இதனுடைய காய், இலை, பூ ஆகியவற்றை நம் அன்றாட உணவில் தினமும் சமைத்து சாப்பிடுவதால் பின்வரும் மருத்துவ பலன்களை நாம் பெற முடியும்.முருங்கைக்காயில் கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து மற்றும் விட்டமின்கள் A, C போன்ற சத்துகள் உள்ளது. எனவே இதை தினமும் சமைத்து சாப்பிடும் போது ஏராளமான நோ ய்கள் குணமடைகின்றன.
இதில் நன்மைகள் மட்டுமே இல்லை என்பதுதான் உண்மை. இந்த பதிவில் முருங்கைக்காயால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்கவிளைவுகள் என்னவென்பதை பார்க்கலாம்.
அதிகநார்ச்சத்து ஆபத்தானது : முருங்கைக்காயில் நார்ச்சத்து அளவு அதிகம் உள்ளது. நார்ச்சத்து உடலுக்கு அவசியமானதாக இருந்தாலும் அது அதிகளவில் உடலில் சேர்வது ஆபத்தானதுதான். அதிகளவு நார்ச்சத்து உடலில் சேரும்போது வயிற்றுப்போக்கு, மலசிக்கல், குடல் பிரச்சினைக ள், வாயுக்கோளாறுகள் போன்ற பி ரச்சினைகள் ஏற்படவாய்ப்புள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதல்ல :
அதிகளவு முருங்கைக்காய் சாப்பிடும்போது அது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் குறைக்கிறது. இதனால் ஹைப்போக்ஸிசிமியா என்னும் நோய் கூட ஏற்படலாம். சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் முருங்கைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

அலர்ஜிகள்:முருங்கைக்காய் என்னதான் ஆரோக்கியமான காயாக இருந்தாலும் அது சிலருக்கு ஏற்றதாக இருக்காது. ஏனெனில் இதில்உள்ள சில வேதிப்பொருட்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். குறிப்பாக நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளவர்களுக்கு முருங்கைக்காயால் அலர்ஜிகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகஅதிகம்.கர்ப்பிணிகளுக்கு ஏற்றதல்ல: கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். முருங்கைக்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் இருந்தாலும் அவை கர்ப்பிணிகளுக்கு சிலசமயம் அலர்ஜிகளை ஏற்படுத்தும். மேலும் கருவில் உள்ள குழந்தையும் இதனால் பாதிக்கப்படலாம்.

related_post