
குஷ்புவுக்கு காங்., எச்சரிக்கை
ராகுலை விமர்சித்த நடிகை குஷ்புவுக்கு காங்கிரசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.துாத்துக்குடியில் பிரசாரம் செய்த காங். - எம்.பி. ராகுல் தண்டால் எடுத்தும் நடனமாடியும் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.இதுகுறித்து காங்.கில் இருந்து விலகி பா.ஜ.வில் ஐக்கியமான குஷ்பு 'தண்டால் எடுப்பதும் நடனமாடுவதும் நல்ல தலைவருக்கு அழகல்ல' என்றார்.
ராகுலை தொடர்ந்து விமர்சித்து வந்தார்.இந்நிலையில் காங். கலைப்பிரிவு குஷ்புவுக்கு எச்சரிக்கை விடும் வகையில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் 'தலைவர் ராகுலை பற்றி தவறான விமர்சனம் தொடர்ந்தால் தனிப்பட்ட முறையில் பதிலடி கொடுக்கப்படும்' என்றனர்.இதற்கு குஷ்பு டுவிட்டர் வாயிலாக அளித்துள்ள பதில்: இது ஒரு எச்சரிக்கையாக இருந்தால் நீங்கள் தவறான கதவை தட்டிக் கேட்க வேண்டாம். ராகுலை பற்றியும் காங்கிரசை பற்றியும் உங்களை விட எனக்கு அதிகம் தெரியும். இதுபோன்ற வெளிப்படையான அச்சுறுத்தலை காங். ஒப்புக் கொள்கிறது என உங்கள் கட்சி கூறட்டும். உங்கள் விரக்தியை வெளிப்படுத்த வேறு நல்ல இடத்தை பார்க்கவும்.இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.