dark_mode
Image
  • Sunday, 24 August 2025
அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு...!

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு...!

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஆகியோ இணைந்து வெளியிட்டனர்.

தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்கள்:

  • ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் திட்டம், வாஷிங்மிஷின் வழங்கும் திட்டம்.
  • அனைவருக்கும் வீடு வழங்கும் அம்மா இல்லம் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • மாணவர்களுக்கு ஆண்டும் முழவதும் 2ஜி இணையம் சேவை இலவசமாக வழங்கப்படும்.
  • பெட்ரோல், டீசல் விலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அனைத்து இல்லங்களிலும் கட்டணமில்லா அரசு கேபிள் சேவை வழங்கப்படும்.
  • ஆண்டுக்கு வீட்டிற்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.
  • வீட்டில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும்.
  • ஓய்வூதியம் 1500 இல் இருந்து 2000 ஆக உயரத்தப்படும்.
  • நீட் தேர்வுக்கு பயிற்சி வழங்கப்படும்.
  • முதல்வர் விவசாயி கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • தூய்மை பணியாளர் ஊதியம் 6000 ஆக அதிகரிக்கப்படும்.
  • ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ. 1,500இல் இருந்து ரூ. 2,500 ஆக உயர்த்தப்படும்.
  • மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் பெயர் சூட்டப்படும்.
  • பெண் குழந்தை திட்டம் -நிதியுதவி உயர்வு; வங்கி அட்டை வழங்கும் திட்டம்: சிஏஏ சட்டத்தை கைவிட வலியுறுத்தல்.
  • குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ. 1,500 குடும்பத்தலைவியிடம் வழங்கப்படும்.
  • உயர்நீதிமன்றம் வழக்காடு மொழியாக தமிழ் கொண்டுவரப்படும்.
  • மாணவர்கள் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.
  • முதியோர் பென்ஷன் ரூ. 2,000ஆக உயர்த்தப்படும்.

related_post