"This is the Face of the Indian Army " - வெளியானது #Amaran திரைப்படத்தின் டிரெய்லர்!
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'.
கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்திற்கு நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
: IPL 2025 | #Dhoni விளையாடுவாரா மாட்டாரா? சிஎஸ்கே நிர்வாகம் போடும் அதிரடி மீட்டிங்?
உண்மைக்கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான 'ஹே மின்னலே' பாடலும், இரண்டாவது பாடலான 'வெண்ணிலவு சாரல்' பாடலும் சமீபத்தில் வெளியாகி அனைவரது மனதையும் கவர்ந்தது. தற்போது வரை இந்த இரண்டு பாடல்களும் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இப்பாடல்கள் ஏற்படுத்திய தாக்கத்தாலேயே பலரும் படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description