dark_mode
Image
  • Thursday, 06 March 2025

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை நடவடிக்கை: 3 பேர் கைது, 400 கிராம் கஞ்சா பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை நடவடிக்கை: 3 பேர் கைது, 400 கிராம் கஞ்சா பறிமுதல்

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனைக்கு எதிராக காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சுசீந்திரம் மற்றும் தக்கலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர்.

 

கைது செய்யப்பட்டவர்கள்:

நாகர்கோவில் NGO காலனி பகுதியை சேர்ந்த சசி என்பவரின் மகன் விக்னேஷ் குமார் (20),

வெள்ளாளன்விளை பகுதியை சேர்ந்த ராஜசேகரன் என்பவரின் மகன் நவீன் (22),

தக்கலை மஞ்சகுளத்தின்கரை பகுதியை சேர்ந்த யூஜின் ஜெரால்ட் என்பவரின் மகன் ஜோஸ்வின் (22).

 

இந்த மூவரும் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீசார் அவர்களை சோதனை செய்த போது 400 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா.ஸ்டாலின் IPS அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மாவட்டத்தில் போதைப்பொருட்களை ஒழிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்தல் மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்த காவல்துறை தொடர்ந்து அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

மக்கள் சமூக நலன் கருதி, இத்தகைய போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர். மு. கார்த்திக், புதிய தலைமைச் செய்தி

 

comment / reply_from

related_post