
10 கோடிக்கு விலை பேசினாங்க.. சினேகன் பரபரப்பு பேட்டி!
விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடாமல் இருப்பதற்காக தன்னிடம் 10 கோடி ரூபாய் விலை பேசினார்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் சினேகன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறார்.
கட்சியின் துணை பொதுச் செயலாளர் மகேந்திரன் சிங்காநல்லூர் தொகுதியிலும், இளம் வேட்பாளர் பத்மபிரியா மதுரவாயல் தொகுதியிலும் களம் காண்கின்றனர். புகழ்பெற்ற பாடலாசிரியர் சினேகன் மக்கள் நீதி மய்யம் சார்பில் விரும்கம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனிடையே கமல்ஹாசன் சினேகனை அறிமுகம் செய்து வைக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.