📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 29.11.2021 திங்கட்கிழமை
அபுல் அஸ்வத் அறிவித்தார்.
நான் மதீனாவில் (கொள்ளை) நோய் பரவியிருந்தபோது மதீனாவுக்கு வந்து உமர்(ரலி) உடன் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. மக்கள் அவரின் நற்பண்புகளைக் கூறிப் புகழ்ந்ததும் உமர்(ரலி), 'உறுதியாகிவிட்டது' என்றார். பிறகு
இன்னொரு ஜனாஸ கடந்து சென்றது. அப்போதும் மக்கள் அவரின் நற்பண்புகளைக் கூறிப் புகழ்ந்து பேசினர். உடனே உமர்(ரலி), 'உறுதியாகிவிட்டது' என்றார். பிறகு மூன்றாவது ஜனாஸா கடந்து சென்றது. மக்கள் அவரின் தீய பண்புகளைக் கூறி இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் உமர்(ரலி), 'உறுதியாகிவிட்டது' எனக் கூறினார். நான் 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! எது உறுதியாகிவிட்டது?' எனக் கேட்டதும். 'எந்த முஸ்லிமுக்காவது அவர் நல்லவர் என நான்கு பேர் சாட்சி கூறினால் அவரை அல்லாஹ் சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் 'மூவர் சாட்சியாயிருந்தால்..?' என்று கேட்டோம். அதற்கவர்கள் 'மூன்று பேர் சாட்சி கூறினாலும் தான்' என்றனர். மீண்டும் 'இருவர் சாட்சியாக இருந்தால்...' என நாங்கள் கேட்தற்கு இரண்டு பேர் சாட்சி கூறினாலும் தான்' என்றார்கள். பிறகு நாங்கள் ஒரு நபர் பற்றிக் கேட்கவில்லை. எனவே, நபி(ஸல்) அவர்கள் கூறியதன் அடிப்படையிலேயே நான் இவ்வாறு கூறினேன்' என்று உமர்(ரலி) கூறினார்.
ஸஹீஹ் புகாரி : 1368.
அத்தியாயம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள்