📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 18-11-2021 வியாழக்கிழமை

தினந்தோறும் குர்ஆன் வசனம் 📚
اعوذ بالله من الشيطان الرجيم
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّيْنَۙ
அதற்கவர்கள் "நாங்கள் தொழவில்லை.
(அல்குர்ஆன் : 74:43)
وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِيْنَۙ
நாங்கள் ஏழைகளுக்கு உணவளிக்கவில்லை.
(அல்குர்ஆன் : 74:44)
وَكُنَّا نَخُوْضُ مَعَ الْخَـآٮِٕضِيْنَۙ
வீணான காரியங்களில் மூழ்கிக் கிடந்தவர்களுடன் நாங்களும் மூழ்கிக் கிடந்தோம்.
(அல்குர்ஆன் : 74:45)
وَ كُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّيْنِۙ
கூலி கொடுக்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்கினோம்.
(அல்குர்ஆன் : 74:46)
حَتّٰٓى اَتٰٮنَا الْيَقِيْنُ
(நாங்கள் மரணித்து) இதனை உறுதியாகக் காணும் வரையில் (இவ்வாறே இருந்தோம்)" என்றும் கூறுவார்கள்.
(அல்குர்ஆன் : 74:47)
தொடர்
தினம் ஓர் ஹதீஸ் 📚
'உம்மு ஹபீபா என்ற பெண் ஏழு ஆண்டுகள் உதிரப் போக்குடையவராக இருந்தார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது, குளிக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டு, 'இது ஒரு நோய்' என்று கூறினார்கள். (இதனால்) ஒவ்வொரு தொழுகைக்கும் அப்பெண் குளிப்பவராக இருந்தார்' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 327.
அத்தியாயம் : 6. மாதவிடாய்

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description