📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 15.11.2021 திங்கட்கிழமை
தினந்தோறும் குர்ஆன் வசனம் 📚
اعوذ بالله من الشيطان الرجيم
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَمَاۤ اَدْرٰٮكَ مَا سَقَرُ
(நபியே!) அந்த நரகம் என்னவென்று நீங்கள் அறிவீர்களா?
(அல்குர்ஆன் : 74:27)
لَا تُبْقِىْ وَ لَا تَذَرُ
அது எவரையும் மிச்சம் வைக்காது; விடவுமாட்டாது.
(அல்குர்ஆன் : 74:28)
لَـوَّاحَةٌ لِّلْبَشَرِ
அது (எரித்து) மனிதனுடைய கோலத்தையே மாற்றிவிடும்.
(அல்குர்ஆன் : 74:29)
عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ
(அவனை வேதனை செய்ய) அதில் பத்தொன்பது பேர்கள் இருக்கின்றனர்.
(அல்குர்ஆன் : 74:30)
தொடர்
தினம் ஓர் ஹதீஸ் 📚
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
பசியாளருக்கு உணவளியுங்கள். நோயாளியை நலம் விசாரியுங்கள். (போர்க் கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்.
என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.3
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்) கூறினார்:
(இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'அல்அனீ' எனும் சொல்லுக்குக் 'கைதி' என்று பொருள்.
ஸஹீஹ் புகாரி : 5373.
அத்தியாயம் : 70. உணவு வகைகள்