📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 14-11-2021 ஞாயிற்றுக்கிழமை
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது காலத்தில் (ஒரு நாள்) மழை பெய்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "மக்களில் நன்றியுள்ளவர்களும் உள்ளனர். நன்றி கெட்டவர்களும் உள்ளனர். (மழை பொழியும் போது) இது அல்லாஹ்வின் கருணை என்று (சிலர்) கூறுகின்றனர். வேறு சிலரோ, இன்ன இன்ன நட்சத்திர இயக்கம் மெய்யாகிவிட்டது என்று கூறுகின்றனர்" என்றார்கள்.
அப்போதுதான், "நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்" என்று தொடங்கி, "(இறைவன் வழங்கிய) உங்கள் வாழ்வாதாரத்திற்கு (நன்றியாக) உங்களது அவிசுவாசத்தை ஆக்குகின்றீர்களா?" என்று முடியும் இறைவசனங்கள் (56:75-82) அருளப்பெற்றன.
ஸஹீஹ் முஸ்லிம் : 127.
அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை