"வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் தயாரிப்பில் முதல் தமிழ் படம்: டீசர் விவாதத்துக்குள்ளானது"

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா, சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. வெற்றிமாறன் மற்றும் அனுராக் கேஷ்யப் கலந்து கொண்ட நிலையில், சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி S தாணு, இயக்குனர் மிஷ்கின், நடிகை டாப்ஸி பண்ணு ஆகியோரும் வந்திருந்தனர். அதில் பேசிய வெற்றி மாறன், எந்த வித்தியாசமான கதையாக இருந்தாலும், அனுராக் காஷ்யப்பிடம் பகிர்ந்து கொள்வது எனது வழக்கம். அப்படி இந்த கதையை பகிர்ந்து கொள்ளும் போதே நாங்கள் இருவரும் சேர்ந்து படத்தை தயாரிக்கும் எண்ணம் இருந்தது. வேறு சில காரணங்களுக்காக தள்ளிப் போனது. ஆனால் விடுதலை 2 பட சூட்டிங்கின் போது, இந்தப் படத்தின் முதல் பாதியை பார்த்த அனுராக், இந்தப் படத்தை தயாரிக்கிறேன் என்று கூறினார். ஆக அனுராக் காஷ்யப் தயாரிக்கும் முதல் தமிழ் படம் என்றார்.
ப்ளூ ஃபிலிம் பாப்பியா?: இதையடுத்து, படத்தின் டீசர் வெளியானது, டீசரில், பதின்பருவத்தில் ஒரு பெண்ணின் உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசரில், பாய் பிரண்ட் வைத்துக்கொள்வது, டேட்டிங் செல்வது, ப்ளூ ஃபிலிம் பாப்பியா என கேட்பது எல்லாம் இடம் பெற்றுள்ளது. இந்த டீசரைப்பார்த்த பலர், இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை வளர்ப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. இப்படி இருக்கும் போது, பள்ளியில் படிக்கும் பெண், இப்படி எல்லாம் நடந்து கொள்கிறாள் என படம் எடுப்பது சரியா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
உங்க ஜாதி பெண்களை செய்ய சொல்லுங்க: இந்நிலையில், இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் தளத்தில், ஒரு பிராமண பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரிப்பது இந்த குலத்தை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளது. வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் & கோவிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியாது. பிராமண பெண்ணின் அப்பாவும், அம்மாவும் பழையவர்கள் இல்லை. இந்த காலகட்டத்திற்கு மாறாமல் இருக்கிறார்கள். உங்கள் சொந்த ஜாதி பெண்களிடம் இதை முயற்சியுங்கள். முதலில் உங்கள் சொந்த குடும்பத்திற்கு அதை வெளிப்படுத்துங்கள் என காட்டமாக பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்து வருகிறது.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description