dark_mode
Image
  • Friday, 07 March 2025

விடாமுயற்சி' பார்க்கச் சென்ற அனிருத்துக்கு ரூ.1000 அபராதம்! நடந்தது என்ன

விடாமுயற்சி' பார்க்கச் சென்ற அனிருத்துக்கு ரூ.1000 அபராதம்! நடந்தது என்ன

 

Anirudh Ravichander fined Rs.1000 while going to see Vidaamuyarchi: விடாமுயற்சி படம் பார்க்கச் சென்ற இசையமைப்பாளர் அனிருத், நோ பார்க்கிங் ஏரியாவில் கார் நிறுத்தியதால் ரூ.1000 அபராதம் செலுத்தினார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அஜித் குமார், திரிஷா நடிப்பில் உருவான 'விடாமுயற்சி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. முதல் நாளே படத்தைப் பார்க்க தீவிர சினிமா ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். இதனால் திரையங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.

 

Vidaamuyarchi Ajith

 

'துணிவு' படம் வெளியாகி சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் படம் ஒன்று வெளியாகிறது என்பதால், விடாமுயற்சி படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அஜித் ரசிகர்கள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு தங்களுக்குப் பிடித்த ஹீரோவை திரையில் பார்க்க ஆவலாக உள்ளனர்.

 

பல திரையுலகப் பிரபலங்களும் தியேட்டருக்குச்

சென்று விடாமுயற்சி படத்தைப் பார்த்து ரசித்து வருகிறார்கள். இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தியேட்டரில் விடாமுயற்சி படம் பார்க்க வந்தார். படத்தைப் பார்த்துவிட்டு வந்த அவருக்கு ஒரு ஷாக் கிடைத்தது.

 

Vidaamuyarchi FDFS

 

படம் பார்த்துவிட்டு ரசிகர்களோடு உற்சாகமாக வெளியே வந்த அனிருத்தை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அனிருத் வந்த கார் நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்ததால் ரூ.1000 அபதாரம் செலுத்த வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் கூறியுள்ளனர்.

 

Anirudh fined Rs. 1000

 

இதனால் மிகவும் அப்செட் ஆன அனிருத் அதைக் காட்டிக்கொள்ளாமல் பணத்தைக் கட்டிவிட்டு காரில் அங்கிருந்தே சென்றார். அனிருத் காருடன் போலீசாரிடம் சிக்கிய வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி உள்ளது. இசையமைப்பாளர் அனிருத்துக்கு ரூ.1000 அபராதம் விதித்த போலீசார், பல ரசிகர்களின் வாகனங்களுக்கும் அபராதம் வசூலித்தனர். இதனால், அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.

comment / reply_from

related_post