லோகேஷ் கனகராஜின் 'கூலி' பட டீசர் அப்டேட்

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பூஜா ஹெக்டே இந்த படத்தில் குத்து பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத் மற்றும் பாங்காக் ஆகிய பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. மீதமிருந்த படப்பிடிப்பு பணிகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று, தற்போது இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த படமானது ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற மார்ச் 14-ம் தேதி டீசர் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.
BY.PTS NEWS M.KARTHIK
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description