ராசிபலன் 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை
ராசிபலன் 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை
மேஷம்
ஆகஸ்ட் 30, 2026
வேலை செய்யும் இடத்தில் மாற்றங்கள் ஏற்படும். மனதில் சுதந்திரப் போக்கு அதிகரிக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் நிமித்தமான முடிவுகளில் ஆலோசித்து முடிவெடுக்கவும். பயனற்ற கருத்துகளை தவிர்க்கவும். சிந்தனைகளின் போக்கில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : மாற்றங்கள் ஏற்படும்.
பரணி : பிரச்சனைகள் நீங்கும்.
கிருத்திகை : சிந்தனைகளில் கவனம்.
---------------------------------------
ரிஷபம்
ஆகஸ்ட் 30, 2026
செய்கின்ற முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். இழுபறியான சில செயல்களில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : ஆதரவான நாள்.
மிருகசீரிஷம் : முடிவுகள் பிறக்கும்.
---------------------------------------
மிதுனம்
ஆகஸ்ட் 30, 2026
பழைய அனுபவம் மூலம் மகிழ்ச்சியான சூழல் அமையும். பொதுமக்கள் பணிகளில் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். உறவுகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வாகன வசதிகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்த காரியத்தை முடிப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : அறிமுகம் கிடைக்கும்.
---------------------------------------
கடகம்
ஆகஸ்ட் 30, 2026
எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உருவாகும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். நேர்மைக்கான அங்கீகாரங்கள் கிடைக்கும். தனித்திறமைகளை வளர்த்திக் கொள்வதற்கான சூழல்கள் உருவாகும். உயர்கல்வி தொடர்பான குழப்பங்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
புனர்பூசம் : அதிர்ஷ்டகரமான நாள்.
பூசம் : அங்கீகாரங்கள் கிடைக்கும்.
ஆயில்யம் : குழப்பங்கள் குறையும்.
---------------------------------------
சிம்மம்
ஆகஸ்ட் 30, 2026
சிந்தனைப் போக்கில் குழப்பங்கள் உண்டாகும். பணி நிமித்தமான பொறுப்புகளும் அலைச்சலும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். ஆதரவாக இருந்தவர்கள் விலகிச் செல்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படலாம். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
மகம் : குழப்பங்கள் உண்டாகும்.
பூரம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
கன்னி
ஆகஸ்ட் 30, 2026
உறவினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான கடன் உதவிகள் கிடைக்கும். கடினமான காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். வாகன பயணங்களால் அலைச்சலும் அனுபவமும் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
உத்திரம் : புரிதல்கள் உண்டாகும்.
அஸ்தம் : எண்ணங்கள் ஈடேறும்.
சித்திரை : அனுபவம் ஏற்படும்.
---------------------------------------
துலாம்
ஆகஸ்ட் 30, 2026
சுப காரியம் நிமித்தமான விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபார பணிகளில் சிறு சிறு மாறுதல்கள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். உடன் இருப்பவர்கள் மூலம் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : விரயங்கள் ஏற்படும்.
சுவாதி : அனுபவங்கள் ஏற்படும்.
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
விருச்சிகம்
ஆகஸ்ட் 30, 2026
புதிய முயற்சிகளில் அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத சில விரயங்கள் நேரிடும். எதிலும் அவசரம் இன்றி சிக்கனத்துடன் செயல்படவும். பணிகளில் பொறுப்புகள் குறையும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளில் ஈடுபாடு உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : அனுபவங்கள் கிடைக்கும்.
அனுஷம் : பொறுப்புகள் குறையும்.
கேட்டை : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
ஆகஸ்ட் 30, 2026
எதிர்பாராத சில வேலைகள் முடிவு பெறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார நிமித்தமான பயணம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் அமைதி உண்டாகும். சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். பணி நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : பிரச்சனைகள் குறையும்.
பூராடம் : அமைதியான நாள்.
உத்திராடம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
---------------------------------------
மகரம்
ஆகஸ்ட் 30, 2026
பேச்சுக்களால் ஆதாயம் உண்டாகும். புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் ஏற்படும். உழைப்புக்கு உண்டான முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகள் மனம் அறிந்து செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.
திருவோணம் : திருப்தியான நாள்.
அவிட்டம் : அன்பு அதிகரிக்கும்.
---------------------------------------
கும்பம்
ஆகஸ்ட் 30, 2026
தனம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வாத திறமையினால் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். முகத்தில் புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். கணிதம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
சதயம் : ஒத்துழைப்புகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : முன்னேற்றம் ஏற்படும்.
---------------------------------------
மீனம்
ஆகஸ்ட் 30, 2026
மனதில் புதுவிதமான செயல் திட்டம் பிறக்கும். கல்வி பணிகளில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். பிடிவாதக் குணத்தை குறைத்து கொள்ளவும். எழுத்து சார்ந்த துறைகளில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். பூர்விக சொத்துக்கள் வழியில் அலைச்சல் ஏற்படும். வியாபாரம் சார்ந்த செயல்களில் விவேகத்துடன் இருக்கவும். உடன் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : குழப்பம் நீங்கும்.
உத்திரட்டாதி : அனுபவம் கிடைக்கும்.
ரேவதி : விட்டுக்கொடுத்து செல்லவும்.
---------------------------------------