ராசிபலன் 27-06-2026 சனிக்கிழமை
ராசிபலன் 27-06-2026 சனிக்கிழமை
மேஷம்
ஜூன் 27, 2026
உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். கல்வி சார்ந்த பணிகளில் இழுபறியான சூழல் ஏற்படும். மறதி தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உங்கள் மீது சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். வியாபார பணிகளில் விடாப்படியான செயல்களை குறைத்துக் கொள்ளவும். சிறு தூர பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்
அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
பரணி : வதந்திகள் மறையும்.
கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும்.
---------------------------------------
ரிஷபம்
ஜூன் 27, 2026
நண்பர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் நுணுக்கமான சில விஷயங்களை அறிவீர்கள். வாழ்க்கைத்துணையின் வழியில் ஆதாயம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
கிருத்திகை : வேறுபாடுகள் நீங்கும்.
ரோகிணி : ஆதரவான நாள்.
மிருகசீரிஷம் : ஆதாயம் ஏற்படும்.
---------------------------------------
மிதுனம்
ஜூன் 27, 2026
விவாதங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை பொறுமையுடன் கேட்டு முடிவெடுப்பது நல்லது. ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆர்வமும் அதனால் விரயமும் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்
மிருகசீரிஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : புரிதல்கள் அதிகரிக்கும்.
---------------------------------------
கடகம்
ஜூன் 27, 2026
வருமானம் பெருக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
புனர்பூசம் : வாய்ப்புகள் ஏற்படும்.
பூசம் : சிந்தனைகள் மேம்படும்.
ஆயில்யம் : ஆசைகள் நிறைவேறும்.
---------------------------------------
சிம்மம்
ஜூன் 27, 2026
குழந்தைகள் மூலம் அலைச்சல்களும் விரயங்களும் உண்டாகும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். சுயவேலை தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உருவாகும். சொத்து வாங்குவது குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : விரயங்கள் உண்டாகும்.
பூரம் : முன்னேற்றமான நாள்.
உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.
---------------------------------------
கன்னி
ஜூன் 27, 2026
வேலை நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். நுட்பமான விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் இருந்த சங்கடங்கள் மறையும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்பாலின மக்கள் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உருவாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : முயற்சிகள் ஈடேறும்.
அஸ்தம் : சங்கடங்கள் மறையும்.
சித்திரை : அனுகூலமான நாள்.
---------------------------------------
துலாம்
ஜூன் 27, 2026
நீண்ட நாள் சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதன் மூலம் நெருக்கடிகளை குறைக்க இயலும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்
சித்திரை : சிந்தித்து செயல்படவும்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : அனுபவம் ஏற்படும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜூன் 27, 2026
மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். உத்தியோகப் பணிகளில் மேன்மை உண்டாகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்து விற்பனையில் லாபம் அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்கள் பற்றிய நினைவுகள் ஒருவிதமான மந்த தன்மையை ஏற்படுத்தும். விளையாட்டு விஷயங்களில் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
விசாகம் : மேன்மை உண்டாகும்.
அனுஷம் : லாபம் அதிகரிக்கும்.
கேட்டை : நிதானம் வேண்டும்.
---------------------------------------
தனுசு
ஜூன் 27, 2026
வியாபார பணிகளில் போட்டிகள் மேம்படும். தடைகள் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தாழ்வு மனப்பான்மையால் ஒரு விதமான குழப்பங்கள் ஏற்படும். புதுவிதமான பயணங்கள் மூலம் அனுபவங்கள் அதிகரிக்கும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். உபரி வருமானம் குறித்த முயற்சிகள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : போட்டிகள் மேம்படும்.
பூராடம் : குழப்பங்கள் ஏற்படும்.
உத்திராடம் : முயற்சிகள் கைகூடும்.
---------------------------------------
மகரம்
ஜூன் 27, 2026
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். விவசாய பணிகளில் லாபம் ஏற்படும். உற்பத்தி பணிகளில் மேன்மை அடைவீர்கள். கற்பனை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
உத்திராடம் : ஒத்துழைப்புகள் அதிகரிக்கும்.
திருவோணம் : புரிதல்கள் உண்டாகும்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
கும்பம்
ஜூன் 27, 2026
அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்துவீர்கள். அரசு பணிகளில் ஆதாயம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்கள் சிறு அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அவிட்டம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
சதயம் : ஆதாயகரமான நாள்.
பூரட்டாதி : வெற்றிகரமான நாள்.
---------------------------------------
மீனம்
ஜூன் 27, 2026
மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். கௌரவப் பொறுப்புகள் மூலம் ஆதரவுகள் மேம்படும். பாகப்பிரிவினை முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன்-மனைவிக்கிடையே நெருக்கமும் அன்யோன்யமும் மேம்படும். உத்தியோக ரீதியான செயல்பாடுகளில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீல நிறம்
பூரட்டாதி : தேடல்கள் உண்டாகும்.
உத்திரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
ரேவதி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
---------------------------------------