dark_mode
Image
  • Monday, 15 June 2026

ராசிபலன் 16-06-2026 செவ்வாய்க்கிழமை

ராசிபலன் 16-06-2026 செவ்வாய்க்கிழமை

ராசிபலன் 16-06-2026 செவ்வாய்க்கிழமை

மேஷம்
ஜூன் 16, 2026

திட்டமிட்ட பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உருவாகும். தவறிய வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பாகப்பிரிவினை முயற்சிகள் கைகூடும். எண்ணிய சில உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : முன்னேற்றம் உண்டாகும்.
பரணி : புரிதல் உருவாகும்.
கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------


ரிஷபம்
ஜூன் 16, 2026

கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தக தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நீண்ட நாள் உறவினர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். தனம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : நெருக்கம் அதிகரிக்கும்.
ரோகிணி : முடிவுகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------


மிதுனம்
ஜூன் 16, 2026

வாழ்க்கை துணைவருடன் சிறு சிறு கருத்து மோதல்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையில் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். நண்பர்களிடத்தில் பேசும்போது கவனம் வேண்டும். குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : மோதல்கள் நீங்கும்.
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : அனுபவங்கள் கிடைக்கும்.

---------------------------------------


கடகம்
ஜூன் 16, 2026

எதிர்பாராத சில உதவிகள் மூலம் நன்மைகள் கிடைக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் மேம்படும். அந்நிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். சகோதரர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். மற்றவர்கள் கருத்துக்களால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

புனர்பூசம் : நன்மைகள் கிடைக்கும்.
பூசம் : விட்டுக் கொடுத்து செல்லவும்.
ஆயில்யம் : எதிர்ப்புகள் நீங்கும்.

---------------------------------------


சிம்மம்
ஜூன் 16, 2026

குடும்ப உறுப்பினர்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் இருந்த இன்னல்கள் குறையும். தகவல் துறைகளில் இருப்பவர்களுக்கு லாபங்கள் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலம் உண்டாகும். வருமானத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : இன்னல்கள் குறையும்.
உத்திரம் : முயற்சிகள் அதிகரிக்கும்.

---------------------------------------


கன்னி
ஜூன் 16, 2026

சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மனம் விட்டு பேசுவார்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். சமூக பணி செல்வாக்கு அதிகரிக்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

உத்திரம் : தெளிவுகள் ஏற்படும்.
அஸ்தம் : ஒப்பந்தங்கள் கைகூடும்.
சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------


துலாம்
ஜூன் 16, 2026

சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். உறவினர்களால் சுப விரயங்கள் உண்டாகும். எண்ணிய சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். சமூக தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் உண்டாகும். பிள்ளைகள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். இறை சார்ந்த வழிபாட்டில் ஈடுபாடு ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

சித்திரை : விரயங்கள் உண்டாகும்.
சுவாதி : முன்னேற்றம் உண்டாகும்.
விசாகம் : ஈடுபாடு மேம்படும்.

---------------------------------------


விருச்சிகம்
ஜூன் 16, 2026

பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை உண்டாகும். எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும்.

அதிர்ஷ்டதிசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : சோர்வுகள் உண்டாகும்.
அனுஷம் : வாதங்களை தவிர்க்கவும்.
கேட்டை : புரிதல்கள் மேம்படும்.

---------------------------------------


தனுசு
ஜூன் 16, 2026

நண்பர்கள் வழியில் ஒற்றுமை ஏற்படும். போட்டி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தவறி போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் குறையும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உடன் இருப்பவர்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மூலம் : ஆர்வம் ஏற்படும்.
பூராடம் : குழப்பங்கள் குறையும்.
உத்திராடம் : அனுபவங்கள் கிடைக்கும்.

---------------------------------------


மகரம்
ஜூன் 16, 2026

ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசு பணிகளில் ஆதாயம் ஏற்படும். தன நெருக்கடிகள் குறையும். மாறுபட்ட அணுகுமுறைகளால் புதுமைகளை ஏற்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகள் மூலம் சில விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.
திருவோணம் : ஆதாயம் ஏற்படும்.
அவிட்டம் : உதவிகள் சாதகமாகும்.

---------------------------------------


கும்பம்
ஜூன் 16, 2026

மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் கல்வி சார்ந்து யோசிப்பீர்கள். சமூகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக மாற்ற முயற்சிகள் கைகூடும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அவிட்டம் : ஆதரவான நாள்.
சதயம் : மதிப்புகள் மேம்படும்.
பூரட்டாதி : முயற்சிகள் கைகூடும்.

---------------------------------------


மீனம்
ஜூன் 16, 2026

ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். வேலையாட்களிடம் அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணப்படும். கலை சார்ந்த பணிகளில் புதுமையான அனுபவங்கள் ஏற்படும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். இறை சார்ந்த சிந்தனையும் வழிபாடும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பயணம் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்

பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்பு உண்டாகும்.
ரேவதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------