dark_mode
Image
  • Friday, 15 May 2026

ராசிபலன் 15-05-2026 வெள்ளிக்கிழமை

ராசிபலன் 15-05-2026 வெள்ளிக்கிழமை

ராசிபலன் 15-05-2026 வெள்ளிக்கிழமை

மேஷம்
மே 15, 2026

எதிலும் சிந்தித்து முடிவெடுக்கவும். எதிர்பாராத சில செலவுகள் குடும்பத்தில் தோன்றி மறையும். முன்கோபத்தால் நண்பர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் நேரிடலாம். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : சிந்தித்து செயல்படவும்.
பரணி : வேறுபாடுகள் நேரிடலாம்.
கிருத்திகை : கவனம் வேண்டும்.

---------------------------------------


ரிஷபம்
மே 15, 2026

குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். ஜாமின் செயல்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். உறவுகளிடம் பொறுமை வேண்டும். பயணங்களில் அலைபேசியை தவிர்க்கவும். வியாபார முதலீடுகள் குறித்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். திடீர் பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரோகிணி : பொறுமை வேண்டும்.
மிருகசீரிஷம் : சோர்வுகள் ஏற்படும்.

---------------------------------------


மிதுனம்
மே 15, 2026

தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும்.
திருவாதிரை : லாபங்கள் மேம்படும்.
புனர்பூசம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.

---------------------------------------


கடகம்
மே 15, 2026

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

புனர்பூசம் : பொறுப்புகள் மேம்படும்.
பூசம் : முடிவுகள் ஏற்படும்.
ஆயில்யம் : இன்னல்கள் குறையும்.

---------------------------------------


சிம்மம்
மே 15, 2026

உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கைகூடும். புதிய சரக்குகள் கொள்முதலில் விவேகம் வேண்டும். உறவினர்களின் வருகைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

மகம் : அனுசரித்து செல்லவும்.
பூரம் : ஆரோக்கியம் மேம்படும்.
உத்திரம் : விவேகம் வேண்டும்.

---------------------------------------


கன்னி
மே 15, 2026

சூழ்நிலைகளை அறிந்து அதற்கு ஏற்ப செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பாக பிரிவினை செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். வித்தியாசமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். பழமையான சில விஷயங்களால் அமைதியின்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்

உத்திரம் : ஆரோக்கியத்தில் கவனம்.
அஸ்தம் : பொறுமையுடன் செயல்படவும்.
சித்திரை : அமைதியின்மையான நாள்.

---------------------------------------


துலாம்
மே 15, 2026

திட்டமிட்ட காரியங்கள் கைகூடி வரும். நெருக்கமானவர்கள் இடத்தில் அன்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவுகள் ஏற்படும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மனதளவில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். தந்தையுடன் இருந்து வந்த வேறுபாடுகள் மறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

சித்திரை : அன்பு அதிகரிக்கும்.
சுவாதி : முடிவுகள் கிடைக்கும்.
விசாகம் : வேறுபாடுகள் மறையும்.

---------------------------------------


விருச்சிகம்
மே 15, 2026

இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் எண்ணிய பணிகள் நிறைவேறும். வியாபார பணிகளில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களுடன் நேரங்களை செலவு செய்து மன மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

விசாகம் : வரவுகள் கிடைக்கும்.
அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.
கேட்டை : ஒத்துழைப்புகள் மேம்படும்.

---------------------------------------


தனுசு
மே 15, 2026

குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வெளியூர் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கூட்டாளிகளிடம் ஒத்துழைப்புகள் மேம்படும். உயர்நிலைக் கல்வியில் கவனம் வேண்டும். பணியில் இருந்த ஆர்வமின்மை குறையும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.

---------------------------------------


மகரம்
மே 15, 2026

சொத்து வாங்குவது குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அலுவலகப் பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். விவசாய பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திராடம் : வேறுபாடுகள் குறையும்.
திருவோணம் : வாய்ப்புகள் ஏற்படும்.
அவிட்டம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

---------------------------------------


கும்பம்
மே 15, 2026

மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவுகள் பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். திறமைக்கான மதிப்புகள் கிடைக்கும். தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : தெளிவுகள் பிறக்கும்.
சதயம் : வாய்ப்புகள் ஏற்படும்.
பூரட்டாதி : கவனம் வேண்டும்.

---------------------------------------


மீனம்
மே 15, 2026

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். மற்றவர்களுக்கு ஆதரவான பணிகளை செய்து மகிழ்வீர்கள். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வியாபார பணிகளில் புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும்.
உத்திரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.
ரேவதி : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------