dark_mode
Image
  • Friday, 12 June 2026

ராசிபலன் 13-06-2026 சனிக்கிழமை

ராசிபலன் 13-06-2026 சனிக்கிழமை

ராசிபலன் 13-06-2026 சனிக்கிழமை

மேஷம்
ஜூன் 13, 2026

கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாற்றங்கள் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். கூட்டாளிகளுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : அலைச்சல்கள் உண்டாகும்.
கிருத்திகை : வாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------


ரிஷபம்
ஜூன் 13, 2026

மாற்றமான செயல்களால் புதிய பாதைகளை உருவாக்குவீர்கள். செய்யும் பணிகளில் கவனம் வேண்டும். பழைய நினைவுகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும். உடல் தோற்றத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் புதுமையான சூழ்நிலைகள் அமையும். வேலையாட்களிடம் பொறுமை வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

கிருத்திகை : பணிகளில் கவனம்.
ரோகிணி : சிந்தித்து செயல்படவும்.
மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.

---------------------------------------


மிதுனம்
ஜூன் 13, 2026

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகள் நேரிடும். உத்தியோக மாற்றப் பணிகளில் சிந்தித்து செயல்படும். பயணங்கள் மூலம் அனுகூலங்கள் ஏற்படும். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : அனுகூலங்கள் ஏற்படும்.
புனர்பூசம் : தெளிவுகள் கிடைக்கும்.

---------------------------------------


கடகம்
ஜூன் 13, 2026

பணி நிமித்தமான புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பழைய பிரச்சினைகள் குறையும். வியாபார இடமாற்ற சிந்தனைகள் உருவாகும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

புனர்பூசம் : முயற்சிகள் பலிதமாகும்.
பூசம் : பிரச்சினைகள் குறையும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------


சிம்மம்
ஜூன் 13, 2026

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தடைப்பட்ட சில வேலைகள் நிறைவு பெறும். விலகி சென்றவர்கள் சாதகமாக இருப்பார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். வியாபார நிமித்தமான சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்

மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : ஆதாயம் உண்டாகும்.
உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------


கன்னி
ஜூன் 13, 2026

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களின் ஆதரவுகள் மூலம் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். தொண்டை தொடர்பான வலிகள் படிப்படியாக குறையும். புதிய செயல் திட்டங்களை அமைத்து அதை செயல் வடிவில் மாற்றுவதற்கான எண்ணங்கள் மேம்படும். பழக்கவழக்கங்களில் சிறுசிறு மாற்றங்கள் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

உத்திரம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அஸ்தம் : ஆதரவுகள் கிடைக்கும்.
சித்திரை : மாற்றங்கள் உருவாகும்.

---------------------------------------


துலாம்
ஜூன் 13, 2026

கொடுக்கல் வாங்கலில் பொறுமை வேண்டும். மனதில் இருக்கக்கூடிய விஷயங்களை வெளிப்படுத்துவதில் சிந்தித்து செயல்படவும். தந்தை வழி உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

சித்திரை : பொறுமை வேண்டும்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------


விருச்சிகம்
ஜூன் 13, 2026

புதிய பொருள்களை வாங்கி மகிழ்கிறீர்கள். வியாபாரத்தில் இருந்த இழுபறிகள் மறையும். உத்தியோகப் பணிகளில் நெருக்கடிகள் குறையும். சுப காரியங்கள் ஈடேறும். கணவன் மனைவி இடையே நெருக்கங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். வர்த்தகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

விசாகம் : இழுபறிகள் மறையும்.
அனுஷம் : நெருக்கங்கள் அதிகரிக்கும்.
கேட்டை : சாதகமான நாள்.

---------------------------------------


தனுசு
ஜூன் 13, 2026

நெருக்கமானவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பணிகளில் இருந்த தடைகள் விலகும். சமூகப் பணிகளில் மாறுபட்ட அனுபவங்கள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களால் மேன்மை ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்

மூலம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
பூராடம் : தடைகள் விலகும்.
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------


மகரம்
ஜூன் 13, 2026

கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். சிற்றின்ப விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதையும் பகுத்தறிந்து முடிவுகளை எடுப்பீர்கள். அழகு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். உணர்வுபூர்வமாக சிந்திப்பதை விட சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவது நல்லது. குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : நெருக்கடிகள் குறையும்.
திருவோணம் : ஈடுபாடு ஏற்படும்.
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------


கும்பம்
ஜூன் 13, 2026

உத்தியோகத் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில திருப்பங்கள் உருவாகும். தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மற்றவர்கள் மூலம் ஆதாயத்தை பெருக்கிக் கொள்வீர்கள். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் காணப்படும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
சதயம் : ஆதாயம் மேம்படும்.
பூரட்டாதி : பயணங்கள் கைகூடும்.

---------------------------------------


மீனம்
ஜூன் 13, 2026

திறமைகளை வெளிப்படுத்துவதில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளையும் அறிந்துகொள்வீர்கள். உறவுகளிடம் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

பூரட்டாதி : சூழ்நிலை அறிந்து செயல்படவும்.
உத்திரட்டாதி : மாற்றங்கள் உருவாகும்.
ரேவதி : தெளிவுகள் ஏற்படும்.

---------------------------------------