dark_mode
Image
  • Thursday, 23 July 2026

ராசிபலன் 23-07-2026 வியாழக்கிழமை

ராசிபலன் 23-07-2026 வியாழக்கிழமை

 

ராசிபலன் 23-07-2026 வியாழக்கிழமை 

மேஷம்
ஜூலை 23, 2026

தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அஸ்வினி : வருத்தங்கள் குறையும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------


ரிஷபம்
ஜூலை 23, 2026

உயர் அதிகாரிகள் மூலம் சில விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். வழக்குகளில் நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும். உத்தியோக பணிகளில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : நுணுக்கங்களை அறிவீர்கள்.
ரோகிணி : குழப்பங்கள் மறையும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------


மிதுனம்
ஜூலை 23, 2026

கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். சவாலான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வியாபார பணிகளில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். உயர்கல்வியில் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மிருகசீரிஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.
திருவாதிரை : ஈடுபாடு உண்டாகும்.
புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.

---------------------------------------


கடகம்
ஜூலை 23, 2026

நினைத்த சில காரியங்களில் அலைச்சல் ஏற்படும். தாயாருடன் விட்டுக் கொடுத்து செல்லவும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வியாபார தொடர்பான பயணங்களால் லாபம் அதிகரிக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். பணி நிமித்தமான இழுபறியான சில வேலைகள் முடியும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்

புனர்பூசம் : அலைச்சல் ஏற்படும்.
பூசம் : லாபம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : வேலைகள் முடியும்.

---------------------------------------


சிம்மம்
ஜூலை 23, 2026

தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் இருந்த வேறுபாடுகள் மறையும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். சிறு தூர பயணங்களால் மனதளவில் மாற்றம் உண்டாகும். அக்கம் பக்கம் இருப்பவர்களால் அனுகூலம் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மகம் : ஒத்துழைப்பு உண்டாகும்.
பூரம் : வேறுபாடுகள் மறையும்.
உத்திரம் : அனுகூலம் பிறக்கும்.

---------------------------------------


கன்னி
ஜூலை 23, 2026

கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்வீர்கள். தோற்றப் பொலிவுகள் மேம்படும். பேச்சுவார்த்தைகள் மூலம் சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் அமையும். மனதளவில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திரம் : புரிதல் ஏற்படும்.
அஸ்தம் : வரவுகள் அதிகரிக்கும்.
சித்திரை : நம்பிக்கை பிறக்கும்.

---------------------------------------


துலாம்
ஜூலை 23, 2026

மனதிற்கு பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் தாமதம் உண்டாகும். முன் கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். வியாபாரம் நிமித்தமான விஷயங்களில் விவேகம் வேண்டும். பணிகளின் தன்மைகளை அறிந்து முடிவுகளை எடுக்கவும். சுப காரியங்களில் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : தாமதம் உண்டாகும்.
சுவாதி : மதிப்பளித்து செயல்படவும்.
விசாகம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------


விருச்சிகம்
ஜூலை 23, 2026

உலக வாழ்க்கை பற்றிய புரிதலும் புதிய கண்ணோட்டமும் பிறக்கும். ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பழைய நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஆடம்பர பொருள்கள் மீது ஈர்ப்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : சந்திப்புகள் ஏற்படும்.
கேட்டை : ஈர்ப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------


தனுசு
ஜூலை 23, 2026

சாமர்த்தியமான பேச்சுக்கள் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் அபிவிருத்தி தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவும் அமைதியும் உண்டாகும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மூலம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூராடம் : அபிவிருத்தியான நாள்.
உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------


மகரம்
ஜூலை 23, 2026

வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தநிலை படிப்படியாக குறையும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். அரசு செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். கலை துறைகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். பிற மொழி பேசும் மக்களின் ஆதரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

உத்திராடம் : மந்தநிலை குறையும்.
திருவோணம் : வரவுகள் கிடைக்கும்.
அவிட்டம் : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------


கும்பம்
ஜூலை 23, 2026

உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வரவுக்கேற்ற செலவுகள் உண்டாகும். சமூகப் பணிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.
சதயம் : சிந்தித்து செயல்படவும்.
பூரட்டாதி : ஆதாயம் ஏற்படும்.

---------------------------------------


மீனம்
ஜூலை 23, 2026

உறவினர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். உடல்நிலையில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். அரசு பணிகளில் சற்று கவனத்துடன் செயல்படவும். பணிபுரியும் இடத்தில் விவேகத்துடன் இருக்கவும். வியாபார அபிவிருத்தி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்கள் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். கொடுக்கல்-வாங்கலில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : விட்டுக்கொடுத்து செல்லவும்.
உத்திரட்டாதி : விவேகம் வேண்டும்.
ரேவதி : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------