ராசிபலன் 24-07-2026 வெள்ளிக்கிழமை
ராசிபலன் 24-07-2026 வெள்ளிக்கிழமை
மேஷம்
ஜூலை 24, 2026
இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். இனம் புரியாத சில சிந்தனைகளால் தயக்கங்கள் ஏற்பட்டு நீங்கும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. வேலை பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களின் செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அஸ்வினி : பணிகளில் கவனம்
பரணி : அலைச்சல்கள் ஏற்படும்.
கிருத்திகை : போட்டிகள் உண்டாகும்.
---------------------------------------
ரிஷபம்
ஜூலை 24, 2026
மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் மேம்படும். வெளியூர் பயணங்களால் சாதகமான சூழல் அமையும். பணி நிமித்தமான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : ஒத்துழைப்பான நாள்.
ரோகிணி : சாதகமான நாள்.
மிருகசீரிஷம் : அறிமுகங்கள் ஏற்படும்.
---------------------------------------
மிதுனம்
ஜூலை 24, 2026
இழுபறியாக இருந்து வந்த சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். தாய் மாமன் வழியில் அனுகூலம் உண்டாகும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : அனுபவங்கள் உருவாகும்.
திருவாதிரை : அனுகூலம் உண்டாகும்.
புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள்.
---------------------------------------
கடகம்
ஜூலை 24, 2026
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். பூர்வீக சொத்து சார்ந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். அலுவல் பணிகள் சற்று குறையும். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். கற்பனை சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : தீர்வு கிடைக்கும்.
பூசம் : பணிகள் குறையும்.
ஆயில்யம் : அனுசரித்து செயல்படவும்.
---------------------------------------
சிம்மம்
ஜூலை 24, 2026
ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். மனை வாங்குவது குறித்த வாய்ப்புகள் சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் சாதகமான சூழல் அமையும். அரசு பணிகளால் ஆதாயம் உண்டாகும். தாய் மாமன் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் ஆதரவாக இருப்பார்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
மகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
பூரம் : ஆதாயம் உண்டாகும்.
உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
கன்னி
ஜூலை 24, 2026
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். காலில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். விமர்சனங்களால் சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நன்மதிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
சித்திரை : மதிப்புகள் உண்டாகும்.
---------------------------------------
துலாம்
ஜூலை 24, 2026
வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். அடிப்படை கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மறையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
சித்திரை : வாய்ப்புகள் அமையும்.
சுவாதி : ஆர்வமின்மை குறையும்.
விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜூலை 24, 2026
வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்காலத் தடைகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். செல்வச் சேர்க்கை தொடர்பான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
அனுஷம் : சோர்வுகள் உண்டாகும்.
கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
தனுசு
ஜூலை 24, 2026
செய்யும் பணிகளில் கவனம் வேண்டும். குழந்தைகளிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் திருப்பங்கள் ஏற்படும். குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். உபரி வருமானம் குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். வியாபார முதலீடுகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீல நிறம்
மூலம் : விட்டுக் கொடுத்து செல்லவும்.
பூராடம் : திருப்பங்கள் ஏற்படும்.
உத்திராடம் : முதலீடுகள் மேம்படும்.
---------------------------------------
மகரம்
ஜூலை 24, 2026
சில பிரச்சனைகளுக்கு அனுபவ அறிவு கைக்கொடுக்கும். அலுவலகத்தில் பொறுப்பறிந்து செயல்படுவீர்கள். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உறவுகள் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். பணியாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : அனுபவம் வெளிப்படும்.
திருவோணம் : மதிப்புகள் மேம்படும்.
அவிட்டம் : தெளிவுகள் பிறக்கும்.
---------------------------------------
கும்பம்
ஜூலை 24, 2026
மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வழக்கு தொடர்பான நுணுக்கங்களை அறிவீர்கள். வேளாண்மை தொடர்பான செயல்களில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவங்கள் உருவாகும். உறவினர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். உயர் மட்ட அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அவிட்டம் : தெளிவு பிறக்கும்.
சதயம் : அனுபவங்கள் உருவாகும்.
பூரட்டாதி : ஆதரவுகள் கிடைக்கும்.
---------------------------------------
மீனம்
ஜூலை 24, 2026
வெளிவட்டாரங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உருவாகும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும் அனுபவமும் ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உருவாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீல நிறம்
பூரட்டாதி : அனுபவங்கள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : ஆதாயம் உருவாகும்.
ரேவதி : வாய்ப்புகள் உருவாகும்.
---------------------------------------