
முதல்வரை விமர்சித்த பிரேமலதா..!
கூட்டணி அமைப்பதில் ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தேமுதி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருகட்சிகளுக்கும் இடையே முரண் ஏற்பட்டது. அதன் காரணமாக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வராததே காரணம் என தேமுதிக கூறியது
தேமுதிகவை சேர்ந்த எல்.கே.சுதீஷும் அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து முதல்வரிடம் கேள்வி எழுப்பிய போது, தேமுதிகவுக்கு பக்குவம் இல்லை என்றும், அரசியலில் பக்குவம் மிக முக்கியம் என்றார்.
தேமுகதிகவின் பலம் அறிந்து தான் சீட் ஒதுக்கப்பட்டது என்றும், தங்கள் பக்கம் எந்த தவறும் இல்லை என்று கூறினார். இந்நிலையில் முதல்வரின் கருத்துக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா எதிர்வினையாற்றியுள்ளார்.
அதிமுக கூட்டணியிலிருந்து, தேமுதிக விலகியதற்கு அக்கட்சியின் பக்குவமற்ற தன்மையே காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்த நிலையில், கூட்டணி அமைப்பதில் ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை எனத் தெரிவித்தார்.