
முதல்வரை எதிர்த்து நிற்கும் திமுக வேட்பாளர் சம்பத்குமார்...!
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்ததும், அரசியல் வட்டாரத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது திமுகவின் வேட்பாளர் பட்டியல். அதுவும், முதல்வர் பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில் யார் திமுக சார்பாக களமிறக்கப்படுகிறார் என்பதை அறிய பலரும் ஆர்வமாக இருந்தனர். 37 வயதான சம்பத்குமார், முதல்வரை எதிர்த்துக் களம் காண்கிறார் என்றதும் பலருக்கும் ஆச்சரியமாக தான் இருந்தது.