dark_mode
Image
  • Sunday, 24 August 2025
மருத்துவமனையில் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மருத்துவமனையில் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

தமிழகத்தைப் போலவே மேற்குவங்க மாநிலத்திலும் தேர்தல் திருவிழா த்தில் 294 தொகுதிகளை கொண்ட சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கிய நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை மர்ம நபர்கள் சிலர் தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நந்திகிராம் தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், ரியாபாரா பகுதியில் மம்தா பானர்ஜி பிரசாரம் மேற்கொள்ள வந்தார். அப்போது காரில் இருந்து இறங்கி மம்தா பானர்ஜி நின்றிருந்த போது மர்ம நபர்கள் மம்தாவை தாக்கினார்கள்.

மம்தாவின் இடது கணுக்கால், காலில் காயங்கள், வலது தோள்பட்டை, முன் கை மற்றும் கழுத்தில் ஏற்பட்ட கடுமையான எலும்பு காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் மம்தாவுக்கு நெஞ்சு வலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த 48 மணி நேரத்திற்கு அவரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

related_post