dark_mode
Image
  • Sunday, 09 March 2025

மத்திய அரசு ஊழியர்களின் புதிய சம்பளம் 2026 ஜனவரி முதல் அமல்.

மத்திய அரசு ஊழியர்களின் புதிய சம்பளம் 2026 ஜனவரி முதல் அமல்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
 

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது:

*மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் அமைக்க பிரதமர் அனுமதி அளித்து உள்ளார்.

*ஆந்திராவின் ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ்தவான் விண்வெளி நிலையத்தில் 3வது ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

*ஸ்ரீஹரிக்கோட்டாவில், இஸ்ரோவின் அடுத்த தலைமுறை ஏவுதள வாகனங்ளுக்கான உள்கட்டமைப்பு இருப்பதையும், அங்குள்ள இரண்டாவது ஏவுதளத்திற்கு உதவும் வகையிலும் 3வது ஏவுதளம் அமைக்கப்படுகிறது.

*ஏவுதளம் மற்றும் அதன் தொடர்புடைய வசதிகள் அமைக்கப்படுவதற்காக 3984.86 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. பணிகள் 4 ஆண்டுகளில் நிறைவு பெறும்.

*இதன் மூலம், இஸ்ரோ அதிகளவில் விண்கலங்களை விண்ணில் செலுத்துவதற்கும், விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லவம், விண்வெளி ஆய்வு திட்டங்களுக்கும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

சம்பளக்கமிஷன் அமைக்க வேண்டும் என்று பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் சம்பளக்கமிஷன் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. புதிய சம்பளக்கமிஷன் பரிந்துரை அடிப்படையில் வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் புதிய சம்பளம், ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பாக சம்பள கமிஷன் அமைப்பது வழக்கம். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்குழு அமைக்கப்படும் இந்தக்குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் சம்பளம், இதர சலுகைகள் உயர்வு செய்யப்படும். கடைசியாக அமைக்கப்பட்ட 7 வது சம்பள கமிஷன், மன்மோகன் தலைமையிலான ஐ.மு.,கூட்டணி ஆட்சியின் போது 2014 ல் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் 2016 ஜன., மாதம் அமல் செய்யப்பட்டன.

அகில இந்திய ரயில்வேமேன் பெடரேசன் சங்க பொதுச் செயலாளர் ஷிவ்கோபால் மிஸ்ரா கூறுகையில், கடைசியாக அமைக்கப்பட்ட சம்பள கமிஷன் பரிந்துரை 2016 ஜன., 1ம் தேதி அமலுக்கு வந்தது. எனவே, புதிய சம்பள கமிஷன் பரிந்துரை 2026 ல் அமல் செய்யப்பட வேண்டும். 10 ஆண்டுகளுக்கு பிறகும், சம்பளம் உயர்த்த முடியாது என்று எந்த அரசும் மறுக்க வாய்ப்பில்லை என நம்புகின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசு ஊழியர்களின் புதிய சம்பளம் 2026 ஜனவரி முதல் அமல்.

comment / reply_from

related_post