
மக்களை பாதிக்காத திட்டங்கள் மட்டும் கொண்டுவரப்படும் - விஜய் வசந்த்
மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத திட்டங்கள் மட்டுமே நடைமுறைபடுத்தப்படும், என கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த எம்.பி. வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுகிறார்.
இன்று விஜய் வசந்த் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சி தலைவருமான அரவிந்திடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.