dark_mode
Image
  • Wednesday, 04 February 2026

மகளிர் உரிமைத்தொகை அதிரடியாக உயர்த்திய முதல்வர்- 2 லட்சம் வரை உயர்ந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி!

மகளிர் உரிமைத்தொகை அதிரடியாக உயர்த்திய முதல்வர்- 2 லட்சம் வரை உயர்ந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி!

பீகார் அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தி வரும் முதலமைச்சரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியுதவியை ₹10,000 லிருந்து அதிகபட்சமாக ₹2 லட்சம் வரை உயர்த்தியுள்ளது. இந்த அதிரடி உத்தரவு, ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண் தொழில்முனைவோராக உருவாவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முதல் தவணையாக ₹10,000 பெற்ற பெண்கள், அதைத் திறம்படப் பயன்படுத்தியிருந்தால், ஆறு மாதங்களுக்குப் பிறகு ₹2 லட்சம் வரை கூடுதல் நிதியுதவி பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். இந்தத் திட்டம் பெண்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்தி, மாநிலத்திற்குள் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் என முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மகளிர் வேலைவாய்ப்பு திட்டம்

முதலமைச்சரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், பீகார் அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ₹10,000 உதவித்தொகை வழங்கி வந்த நிலையில், தற்போது அதை ₹2 லட்சம் வரை உயர்த்தியுள்ளது. இந்தத் திட்டம், ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண் தொழில்முனைவோராக வரவேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.

முதல்வர் நிதிஷ்குமார்

இந்த புதிய உதவித் திட்டம் குறித்த அறிவிப்பை முதல்வர் நிதிஷ் குமார் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு வெளியிட்டார். இந்த உதவித்தொகை, பெண்கள் அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து படிப்படியாக வழங்கப்படும். முதல் கட்டமாக, ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒரு பெண்ணுக்கு ₹10,000 வழங்கப்பட்டது. இதுவரை 1 கோடியே 56 லட்சம் பயனாளிகளுக்கு இந்தத் தொகை நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்களுக்கும் விரைவில் பணம் வழங்கப்படும்.

₹10,000 முதல் தவணை

₹10,000 முதல் தவணையாகப் பெற்ற பெண்கள், அந்த நிதியை வேலைவாய்ப்புக்குச் சரியாகப் பயன்படுத்தியிருந்தால், ஆறு மாதங்களுக்குப் பிறகு கூடுதல் உதவிக்குத் தகுதியுடையவர்கள் ஆவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு ₹2 லட்சம் வரை கூடுதல் நிதி உதவி வழங்க செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. முந்தைய தொகை சரியாகப் பயன்படுத்தப்பட்டால், இந்தத் தொகை கட்டம் கட்டமாக வழங்கப்படும்

பயனாளிகளின் பணி

பயனாளிகளின் பணி ஆறு மாதங்களுக்குப் பிறகு மதிப்பாய்வு செய்யப்படும். அவர்களின் வேலையை மதிப்பிட்டு, அதற்கேற்பக் கூடுதல் நிதியை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று முதல்வர் தெரிவித்தார். சிறப்பாகப் பணியாற்றும் பெண்களுக்குத் தேவைக்கேற்ப மொத்தத் தொகையும் வழங்கப்படும். மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெற்று பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குச் சந்தைப்படுத்தல் ஏற்பாடுகளை அரசுத் துறைகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், இதர அரசுத் திட்டங்களுடன் பயனாளிகளை இணைக்கவும் முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

பெண்களின் பொருளாதார நிலை

இந்தத் திட்டம் பெண்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்தி, மாநிலத்திற்குள் சிறந்த வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று முதல்வர் நிதிஷ்குமார் கூறினார். உள்ளூர் வேலைவாய்ப்பு மேம்படுவதால், மக்கள் பீகாருக்கு வெளியே வேலை தேடி அலைய வேண்டிய கட்டாயம் இருக்காது என்றும் அவர் உறுதியளித்தார். பீகார் மக்கள் வேலைவாய்ப்பிற்காகத் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுக்கும் வருகிறார்கள். இந்தத் திட்டம் மூலம் மகளிர் முன்னேற்றம் மட்டுமின்றி உள்ளூரிலும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும் என பீகார் அரசு நம்புகிறது. இதன் மூலம் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் பீகாரிகள் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்றும் நிதிஷ் அரசு நம்புகிறது.

related_post